பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தமிழ்நாடும் மொழியும்


2. தமிழ் நிகண்டுகளின் விரிவுப் பெருக்கம் தமிழின் தொன்மையைக் காட்டும். 68500 சொற்களை யாழ்ப்பாணத்துத் தமிழ் அகராதியில் காணலாம். வின்சுலோ என்ற ஐரோப்பியரின் பெரு முயற்சியால் வெளிவந்த பல்கலைக் கழக அகராதியில் 84000 சொற்கள் காணப்படுகின்றன.

3. பழங் கன்னடம், பழைய மலையாளம், துளுவம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றமை தமிழின் தொன்மையைக் காட்டும்.

4. வடமொழிச் சொற்களைத் தமிழாக்கி வழங்கும் தன்மை தமிழின் பழமையைக் காட்டுவதாகும்.

5. பழைய கல் வெட்டுக்கள் எல்லாம் பழந்தமிழ் எழுத்துக்களிலும், வட்டெழுத்துக்களிலும் எழுதப்பட்டுள்ளமை தமிழின் தொன்மைக்குச் சான்று பகரும்.

6. தெலுங்கின் முதற் சொற்களும் விகுதிகளும் தமிழின் முதற் சொல் விகுதி இவற்றின் மரூஉவாக மிகுதியாக இருப்பதும் தமிழின் தொன்மையை விளக்கும்.

அடுத்து தமிழின் தொன்மை குறித்துத் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம். அவர் எழுதியிருப்பதாவது:

“தமிழ் மொழியின் இயலே தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகின்றது. தமிழின் தொன்மை வரலாற்றுக் காலத்தையும் கடந்து நிற்பதொன்று. உலகில் நிலவும் பல மொழிகளுள் நம் தமிழ் மொழி மெல் லோசை உடையது என்பது வெளிப்படை மெல்லோசை மொழி நேற்றோ இன்றோ தோன்றியிராது."

தமிழ் நூல்களிலே மிகவும் தொன்மை வாய்ந்த நூல் ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியமே என்பதைத் தமிழ்