பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செந்தமிழும் கொடுந்தமிழும்

169


என்ற வெண்பாவால் காட்டியுள்ளார். நச்சினர்க்கினியர், சேணுவரையர் ஆகிய பிற உரையாசிரியர்கள் புனல்நாட்டுக்குப் பதிலாக ஒளி நாட்டையும் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் தெய்வச்சிலையார் என்ற மற்ருெரு தொல்காப்பிய உரையாசிரியர் இவர்களைப்போலக் கூறவில்லை. அதுமட்டுமல்ல; இவர்களை மறுத்தும் உரை கூறியுள்ளார்.

"செந்தமிழ் மொழி வழங்கும் தமிழ் நாட்டின் கூறுகளாம் பன்னிரு நிலம் என்னும் பொருள் சிறக்கவில்லையோ? செந்தமிழ் நாடு கொடுந்தமிழ் நாடு எனத் தமிழ்நாடு பண்டு பிரிவுண்டு கிடந்ததுண்டோ? இல்லையே !" என்பது தெய்வச்சிலையார் முழக்கமாகும். பேராசிரியர் அரசன் சண்முகம் அவர்களும் தெய்வச்சிலையார் கருத்தையே வலியுறுத்தி, முன்னைய உரையாசிரியர் கூற்றைத் தக்க சான்றுகளோடு மறுத்துக் கூறியுள்ளார். முரண்பாடுகள் இப்பிரிவில் மட்டுமல்ல; இவை வழங்கும் நாடு எது என்பதிலும் காணப்படுகின்றது. ஒருசிலர் பாண்டிய நாட்டைக் கூறுவர். மற்ருெரு சிலர் சோழநாட்டைக் கூறுவர்.

"செந்தமிழ் நிலமாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் ஆகும்" என்பது காரிகை உரையாசிரியர் போன்ற சிலர் கூற்றாகும். இது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. சங்கப் புலவர் உட்பட எல்லாப் புலவர்களும் பாண்டிய நாட்டையே செந்தமிழ்நாடு எனக் கூறிப்போந்தனர். பாண்டிய நாடே சேர சோழ நாடுகளைவிடச் செந்தமிழ் ஆராய்ச்சிக்குரியது” என்பர் திராவிடப்பிரகாசிகை ஆசிரியர். "தென்னன் உறை செந்தமிழ்க் கன்னிநாடு” என்று பாண்டிய நாட்டையே பின்னால் வந்த நாயன்மாரும் ஆழ்வார்களும் கூறிச் சென்றனர். இவர்கள் மட்டுமல்ல; நன்னுால் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயர்,