பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கண வளர்ச்சி

189


இவர் வீரசோழன் பெயரால் இந்நூலை இயற்றினர். இந் நூலின் மூலம் வடமொழிப் புணர்ச்சி இலக்கணங்கள் முதலியவற்றை நன்கு அறியலாம். இலக்கண விளக்கத்தின் ஆசிரியர் திருவாரூர் வைத்தியநாத தேசிகராவார். இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்பர். இதில் ஐந்திலக்கணங்களும் நன்கு கூறப்பட்டுள்ளன. ஆனல் எழுத்து, சொல், பொருள் என்றே இந்நூல் மூன்ருகப் பிரிக்கப்பட்டுள்ளது. அணியிலக்கணம், யாப்பிலக்கணம், பாட்டியல் இம்மூன்றும் பொருளதிகாரத்தில் அடங்கியுள்ளன. தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம், அகப்பொருள், வெண்பா மாலை போன்ற நூற்கருத்துக்களைத் தழுவி இதனை இந் நூலாசிரியர் எழுதி உள்ளார். மேலும் இந்நூலுக்கு உரை யும் இவரே எழுதியுள்ளார். இவர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். படிக்காசுப் புலவர் இவரது மாணவர் ஆவார். திருவாரூர்ப் பன்மணிமாலை, மயிலம்மை பிள்ளைத் தமிழ் முதலியன இவரது பிறநூல்களாகும். இவர் சைவ சமயத்தினர். தொன்னூல் என்பது மற்ருெரு நூலாகும். இதன் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைச் சுருக்கிக் கூறும் வசன நூலாகும்.

பிறநூல்கள்

இலக்கணக் கொத்தும் இலக்கண விளக்கச் சூறாவளியும்

இலக்கணக் கொத்து என்னும் நூல் கி. பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈசான தேசிகர் எனப்படும் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது. 151 சூத்திரங்களாலான இந்நூல் வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடிையது. தொல்காப்பியத்தில் அருகிக் கிடந்த இலக்கண விதிகளையும், சில வடமொழி இலக்கணங்