பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கண வளர்ச்சி

191


பாடினியம் என்னும் யாப்பு இலக்கண நூல் யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.

இறையனர் அகப்பொருள்

இது இறையனர் என்பவரால் இயற்றப்பட்ட களவியல் நூலாகும். இதனை அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். கடைச் சங்கப் புலவர் நாற்பதின்மரும் இதற்கு உரை கண்டனர். ஆனால் நக்கீரர் எழுதிய உரை மிகச் சிறந்ததாக விளங்குகின்றது. தூய செந்தமிழ் நடைக்கு எடுத்துக் காட்டாக இவ்வுரை நூல் விளங்குகின்றது.

இதுவரை எழுதியவாற்றால் தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்றாக இருந்த தமிழ் இலக்கணம், காலம் செல்லச் செல்ல எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாகி, பின்பு பொருள் அகம், புறம் எனப் பிரிந்து வளரலாயிற்று என்பதை அறிகிறோம். இவை போகப் பாட்டிலக்கணம், பொருத்த இலக்கணம் என்பவையும் தோன்றின. பாட்டிலக்கணம் என்பது 96 வகைப் பிரபந்தங்களைப் பற்றிக் கூறும் நூலாகும். பொருத்த இலக்கணம் என்பது மங்கலம் முதலாகப் பாட்டுக்கும், பாட்டுடைத் தலைவனுக்கும் உரிய பொருத்தங்களாகும். இவற்றேடு பிரயோக விவேகம் என்ற நூலும் உள்ளது. ஆனால் 19 - ஆம் நூற்ருண்டின் நடுப் பகுதியிலே தமிழிலக்கணம் இதுவரையில் வந்த வழியைவிட்டுப் புது வழியே செல்லத் தொடங்கிற்று. அதுவரை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என வளர்ந்த தமிழிலக்கணம் 19-ஆம் நூற்ருண்டிலே மொழி நூல்: (Philology) என்ற துறையிலே வளரலாயிற்று. இதற்கு அடிப்படைக்கல் நாட்டியவர் கால்டுவெலே. அவரே இந்த மொழி நூல் துறை தமிழிலில் ஏற்பட மூலமாவார். அவர் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஈடும் இணையும் அற்றது.