பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழ் நாடும் மொழியும்


பஃறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடையே எழுநூறு காவதம் (7000 கல்) பரப்புள்ள 49 நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் பதியும் கடல் கொண்டு ஒழிந்தமையால் குமரியாகிய பௌவம் என்றார்" என்று கூறினர். எனவே உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறுவதைக் கொண்டு காணுங்கால் அக்காலத்தில் தெற்கு எல்லை குமரிக் கடலாக இருந்தது என்னும் உண்மை நன்கு விளங்கும்.

மலைகள்

தமிழகத்திலே மலைகளுக்குக் குறைவில்லை. வடக்கே திருப்பதி; மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை; கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலை. மேற்குத் தொடர்ச்சி மலையிலே பல பிரிவுகள் உள. பாலைக்காட்டுக்கு வடக்கே உள்ள மலைத் தொடர் வான மலை எனப்படும். வான மலைக்கு வடக்கே குதிரை மலை, ஏழில் மலை என்ற இரு மலைகள் உள. பாலைக்காட்டுக்குத் தெற்கே உள்ள தொடர் தென்னம் பொருப்பாகும். இத்தொடரில் நேரி மலை, அயிரை மலை, பொதிய மலை, நாஞ்சில் மலை முதலிய மலைகள் உள. இவை மட்டுமா! காவிரியின் வடகரையிலே கொள்ளி மலை உள்ளது. திருச்சி மாவட்டத்தில் விச்சி மலை உள்ளது. வட ஆர்க்காட்டிலே விச்சி மலை அல்லது பச்சை மலை உள்ளது.

பேராறுகள்

தமிழகத்திலே பேராறுகளும் சிற்றாறுகளும் நிறைய ஓடி நாட்டை நஞ்சை நிலமாக வளப்படுத்துகின்றன. பெண்ணை, காவிரி, வையை, பேரியாறு, வானியாறு என்பன பேராறுகள். வெள்ளாறு, தண்ணான் பொருநை, பொன்வானி, பூவானி, பொருநை, ஆன் பொருநை என்பன சிற்றாறுகளாம்.