பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் மொழியும் வடமொழியும்

195


தமிழிலே ஒன்று, பல என்ற வழக்குண்டு; வடமொழியிலோ ஒன்று, இரண்டு, பல என்ற வழக்குண்டு.

தமிழிலே நாம் என்று சொன்னால் இச்சொல் முன்னிலை யாரையும் உளப்படுத்தும்; நாங்கள் எனின் முன்னிலை யாரை உளப்படுத்தாது. இத்தகைய வேறுபாடு வடமொழியில் இல்லவே இல்லை. இனிச் சிவஞான முனிவர் கூறுவ தாவது :

'தமிழ் மொழிப் புணர்ச்சிகட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக் குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை, அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் - புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய தினைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யு ளிலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்”

இதுகாறும் கூறியவாற்றால் வடமொழி வேறு தமிழ் மொழி வேறு என்பது தெளிவுறும்.

தமிழகத்தே வடமொழி வந்து வழங்கத் தொடங்கியதினால் தமிழ் பெற்ற கெடுதல்கள் பல. அவற்றுள் குறிப்பிடத் தக்கது. வடமொழி தமிழிற் கலக்கப்பட்டமையேயாகும். இக்கலப்பு தீய எண்ணத்தோடுதான் வடமொழி வாணரால் செய்யப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடில்லை.

தமிழிலே வடமொழிக் கலப்பு சங்க காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. வடமொழிக் கலப்பு உச்ச நிலையையடைந்த காலம் கி. பி. 13, 14, 15 ஆகிய நூற்றாண்டுகளாகும். ஏனென்றால், இக்காலத்தேதான் மணிப்பிரவாள நடையிலே எழுதப்பட்ட ஈடும், சீபுராணமும் தோன்றியது என்பதால் என்க. வட சொற்களும் தமிழ்ச் சொற்களும்