பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்


மிழ் நெடுங்கணக்கு என்ற சொற்றொடர் தமிழிலுள்ள உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகிய எழுத்துக்களைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துக்களிலே சிலவற்றிற்கு உயிர் என்றும், இன்னும் சிலவற்றிற்கு மெய் என்றும், வேறு சிலவற்றிற்கு உயிர்மெய் என்றும், ஆய்தம் என்றும் பெயரிட்டனர். நந்தம் செந்தமிழ்ப் புலவர்கள். உயிர், மெய், முதலிய பெயர்களே அவற்றினாற் குறிக்கப்படும் எழுத்துக்களின் இயல்பைத் தெள்ளத் தெளியக் குறிக்கும் தகையவாம். உயிர் என்ற பெயரால் குறிக்கப்படுகின்ற எழுத்துக்கள், வேறு எவற்றின் துணையும் இன்றித் தனியுரிமையோடு இயங்கவல்லன. எனவே அவை உயிர் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. அ முதல் ஒளகார இறுதியாக உள்ள பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாம். உந்தியிலிருந்து எழுகின்ற காற்றானது வாயின் வழியே யாதொரு தடையுமின்றி வெளிவருகின்ற பொழுது பிறப்பது உயிராகும். உயிர் எழுத்துக்களிலே பலவகை உண்டு.

அ, இ, உ, எ, ஒ என்பன குறில்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள என்பன நெடில்கள்.
அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள்.

உயிர் எழுத்துக்களின் அடிப்படை எழுத்துக்கள் அ, இ, உ, என்னும் மூன்றாகும். அ வும் இ யும் சேரின் எ பிறக்கும். அகரமும் உகரமும் சேரின் ஒ பிறக்கும். நா கிடந்த நிலையில் வாயைத் திறக்க அகரமும், அந்நிலையில் நா முன்னீக்கி எழுகையில் இகரமும், பின்னோக்கி எழுகையில்