பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்

201


உகரமும் பிறக்கும். உயிர் எழுத்துக்களிலே ஐ என்பதும் ஒள என்பதும் கூட்டொலிகளாகும்.

உயிர் எழுத்துக்கள் புகுதற்கு இடமாக உள்ள க் முதலிய பதினெட்டெழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் எனப்படும். மெய் எனின் உடம்பு என்று பொருள். வாயின் வழியே வருங்காற்று உதடு, பல், நா முதலியவற்றினால் தடைப்படுத்தப்பட்டு வெளியிடப்படின் மெய்யெழுத்துக்கள் பிறக்கும். மெய் எழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் உரிய முயற்சி மட்டும் ஒன்று; பிறக்கும் இடம் மட்டும் வெவ்வேறு. அஃதாவது மூக்கின் வழியாகக் காற்று வருகையில் மெல்லினம் பிறக்கும் என்பதாம். ககார முதல் னகார முடிய உள்ள பதினெட்டும் மெய் எழுத்துக்களாம். இவற்றிலே ய, வ, என்ற இரண்டும் அரையுயிர்கள் என்றும் உடம்படு மெய்கள் என்றும் கூறப்படும். க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் என்பனதாம் உண்மையிலேயே மொழிக்கு முதலில் வரும் மெய் எழுத்துக்கள். ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்பன இறுதியில் வரும் மெய் எழுத்துக்கள். மொழிக்கு இடையிலே வல்லினத்துக்குப் பின் மெல்லினம் வருதல் இல்லை.

ஆய்தம் என்பது புள்ளி, தனிநிலை, அஃகேனம் முதலிய பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இது மொழிக்கு இடையிலேதான் வரும். மிகவும் அருகிய பயிற்சியுடையது ஆய்தம். இந்த ஒர் ஆய்த எழுத்தைக் கொண்டே எத்தகைய பிறமொழிச் சொற்களையும், பிறமொழி எழுத்துக்களைக் கடன் வாங்காமலேயே தமிழிலே எழுதிவிடலாம் என்று நிறுவினர் காலஞ்சென்ற அறிஞர் பா. வே. மாணிக்கனார்.

உயிர்மெய் மொத்தம் இருநூற்றுப் பதினாறு ஆகும். மெய்யெழுத்துப் பதினெட்டையும் உயிரெழுத்துப் பன்னிரண்-