பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்

203


நீக்கப்பட்டது. இன்றைய ஏட்டில் புள்ளியிடப்பட்டே மெய்யெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.

இங்கே ககரம் முதல் கெள வரை உள்ள எழுத்துக்களும் பதினெட்டு மெய்களுக்கும் இனமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

க (க்) புள்ளி நீக்கி எழுதப்பட்டது.
க + ஆ = க என்று முற்காலத்தே எழுதப்பட்ட வடிவம்.
கா-இஃது இன்றைய வடிவம்.
கி, கீ = மேல்விலங்கு இருந்தது.
கு, கூ = என்று முன்னர் எழுதப்பட்டது. கெ = அன்றும் இன்றும் இவ்வாறே

எழுதப்பட்டுவருகிறது.

கே. = இது, கெ் என்று எழுதப்பட்டது.

கெ் இதனைக் கே என்று வீரமாமுனிவர் ஆக்கினார்.

கொ என்பதன் பண்டைய வடிவம் கெ ஆகும். கோ என்பது கெ். என்று முன்பு எழுதப்பட்டது. கை என்பது ooக என்றெழுதப்பட்டது. கெள என்பது கெoo என்றெழுதப்பட்டது. ரகர மெய்யும், ரகர உயிர் மெய்யும் முற்காலத்தே:"ா” என்ற ஒரு வடிவாலேயே குறிக்கப்பட்டன. பின்னர் இக்குறியீட்டின் தெளிவின்மையை அறிந்த வீரமாமுனிவர் ரகர மெய்யினை ர் என்றும், ரகர உயிர் மெய்யினை ர் என்றும் எழுதினர்.

ஆய்தம்

.. என்பது தொல்காப்பியர் காலத்து ஆய்த வடிவம். ஃ என்பது உரையாசிரியர் காலத்து ஆய்த வடிவம். இன்று இரண்டும் வழக்கில் உள்ளன.