பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தமிழ்நாடும் மொழியும்


மேலும் அரசினர் அனுப்பும் திருமுகம் இந்தக் கண்ணெழுத்தினால் எழுதப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

வட்டெழுத்து

வட்டெழுத்துக்கு வெட்டெழுத்து, நானாமோனம், தக்கண மலையாளம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. வட்டெழுத்து உள்ள கல்வெட்டுக்கள் பாண்டிய நாட்டிலும் மலை நாட்டிலும் காணப்படுகின்றன. வட்டெழுத்தின் தோற்றம் பற்றிப் பலர் பலவாறு கூறுவர். டாக்டர் பர்னல் என்பவர், வட்டெழுத்தானது பிராமி எழுத்திலிருந்து வளர்ச்சியடையவில்லை என்றும், பிராமி எழுத்துக்கு மூலமான பினீய எழுத்திலிருந்து தோன்றியது என்றும் கூறுகிறார். டாக்டர் பீலர் என்பவர் இக்கொள்கையை மறுத்து வட்டெழுத்து பிராமியிலிருந்து வளர்ந்தது என்கிறார். இவை யெல்லாம் அவ்வளவு தூரம் பொருந்தவில்லை. வட்டெழுத்து என்பது தமிழுக்கே உரிய எழுத்தாகும்.

கோல் எழுத்து

வட்டெழுத்திலிருந்து கோல் எழுத்துத் தோன்றியது. பிற்காலச் சோழப் பேரரசர்கள் ஆதிக்கம் பெற்ற காலத்தில் அவர்களாட்சிக்குட்படாத மலை நாட்டில் வட்டெழுத்து வழங்கி வந்தது என்பர். வட்டெழுத்தின் பிற்கால வடிவங் களுள் ஒன்றே கோல் எழுத்தாகும்.

கிரந்த எழுத்து

தமிழ்நாட்டில் வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு வந்து குடியேறிய ஆரியர்கள், தங்களின் வழக்கொழிந்த வட மொழியைத் தமிழரிடையே பரப்ப முயன்றனர். அதற்குரிய முயற்சிகளுள் ஒன்றே கிரந்த எழுத்தைத் தோற்றுவித்தமையாம். கிரந்த எழுத்து என்பது அவர்களால் தமிழ்