பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தமிழ்நாடும் மொழியும்


தமிழ்நாட்டில் மொழியும் கலையும் வளர்த்தவர்கள் பாண்டியப் பெரு வேந்தர்களே; சங்கப் புலவர்களுக்குப் பொன்னும் மணியும் வாரி வாரி வழங்கி அவர்களை வாடாது வாழவைத்த காரணத்தினுல்தான் தமிழ்க் கருவூலங்களாகிய சங்க இலக் கியங்களைத் தமிழ்நாடு பெற முடிந்தது. கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த புலவரில் பெரும்பாலோர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்களாவர். பாண்டிய மன்னரில் பலர் சிறந்த புலவர்களாகவும் விளங்கினர். பாண்டிய மன்னரில் தலை சிறந்த வணுகிய பாண்டியன் நெடுஞ்செழியன் சிறந்த புலவனுவான். மாங்குடி மருதனுர் இயற்றிய மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் இவனே. புறநானூற்றில் இவனைப் பற்றிய பாடல்களும், இவன் பாடிய பாடல்களும் காணப்படுகின்றன. இவன் புலவர்களிடத்துப் பேரன்பும், பெரு மதிப்பும் வைத் திருந்தான் என்பதைப் பின் வரும் அவனது வஞ்சினப் பாட்டு ஒன்றில் அறியலாம்.

மாற்றாரை ஒருங்குஅகப் படேஎனயின்
மாங்குடி மருதன் தலைவ னாகப்
புலவர் பாடாது வரைக என் நிலவரை!”

மற்றொரு பாண்டிய மன்னனுகிய உக்கிரப்பெருவழுதி காலத்திலேதான் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்பர் அறிஞர். பாலை பாடிய பெருங் கடுங்கோ, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் போன்ற பாண்டியரும் சிறந்த புலவர்களாய் விளங்கினர். பாரி மகளிர், பூதப்பாண்டியன் தேவி, போன்ருேர் தமிழ்ப் புலமை பெற்று விளங்கிய அரசகுல மங்கையராவர். பன்னடு தந்த பாண்டியன் மாறன் வழுதி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற இருவரும் முறையே நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களைத் தொகுப்பித்த அரசராவர். சுருங்கக்கூறின் சங்க காலத்தில் முத்தமிழும் முழங்கிய இடம் பாண்டிய நாடே சிறப்பாக மதுரையம்-