பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

217


பதியே. இத்தகு சிறப்பிற்குக் காரணமாக இருந்தவர்கள் பைந்தமிழ் வளர்த்த பாண்டியரே. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் வாழ்ந்த புலவர்கள் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரைக்கு வந்து தம் புலமைத் திறனைக் காட்டி மக்களிடையே மாண்பும் மதிப்பும் பெற்றனர். பாண்டியர் அளித்த பரிசில்கள் பல அவர்தம் வாழ்க்கையை வளம்பெறச் செய்தன.

தமிழ் வளர்த்த குறுமுனியாகிய அகத்தியர் வாழ்ந்த இடமாகிய பொதிய மலை பாண்டிய நாட்டைச் சேர்ந்தது என்பது நாமறிந்ததொன்றே. இதுவரை கூறியவாற்றல் சங்க காலத்தில் தமிழ் செழித்து வளர்ந்த இடம் பாண்டிய நாடு என்பது நன்கு புலகுைம். இதன் காரணமாகத்தான் பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை என்று பிற்காலத்தில் பாடலொன்று எழுந்தது போலும் !

சமண பெளத்தர்களின் தமிழ்த்தொண்டு

சமணர்

த மி ழ் நா ட் டி ற் கு வந்து பரவிய புறச் சமயங்களிலே தொன்மை வாய்ந்த சமயம் சமண சமயமாகும். இச்சமயவொழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகிய சமண முனிவர்களால் தமிழ்மொழி அடைந்த நன்மைகள் மிகப் பலவாகும். தமிழுக்குப் பிற சமயத்தவரை விட அதிகமாகத் தொண்டு செய்தவர்கள் இவர்களே. சின்னூல்களும், பெருநூல்களும் செய்தும், புதுநெறிக் கருத்துக்களை இலக்கணங்களில் புகுத்தியும், தமது நூல்களில் தம் சமயக் கருத்துக்களைப் புகுத் தியும், இவர்கள் சமயத்தொண்டும், அதே நேரத்தில் தமிழ்த் தொண்டும் புரிந்தனர். இதே போன்றுதான் கிறித்தவர்களும் பிற்காலத்தில் தமிழ்த்தொண்டு புரிந்தனர்.