பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

221


இறுதியில் வாழ்ந்தனர். திருமுறைகளில் முதலில் எழுந்தவை இக்காலத்தனவே. திருமுறைப் பாடல்கள் கோவில்கள் தோறும் பாடப்பெற்றன; கல்வெட்டுக்களிற் பொறிக்கப்பட்டன.

சிறந்த இலக்கியங்கள் இக்காலத்தில் எழுந்தன போன்று இலக்கண நூல்கள் பல இக்காலத்தில் எழுந்தன. அமிதசாகரரது யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் என்ற நூல்கள், தண்டியலங்காரம், குணவீரர் எழுதிய நேமிநாதம், நம்பியகப் பொருள். சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு, புத்தமித்திரரது வீர சோழியம் போன்ற நூல்கள் இக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சேவைரையர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களில் பெரும்பாலோர் இக்காலத்தில்தான் வாழ்ந்தனர். மேலும் வடமொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளும் சோழர் காலத்தில் செய்யப்பட்டன. இதுவரை எழுதியவாற்றால் பிற்காலச் சோழர் காலத்தில் தமிழில் பல்வேறு இலக்கியங்கள் தோன்றின என்பது புலனாகும்.


இடைக்காலத்தில் தமிழ் வளர்த்த வள்ளல்கள்

இடைக்காலத்தில் வாழ்ந்த பேரரசர்களும், சிற்றரசர் களும், செல்வர்களும் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித் தமையால், தமிழும், தமிழ் இலக்கியமும் நன்கு வளர்ச்சி அடைந்தன.

ஒட்டக்கூத்தர் என்னும் புலவர், விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன் ஆகிய இம்மூவர் காலத்திலும் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தார் என்பது நாமறிந்ததொன்றே. மேலும் இவர் குலோத்துங்க மன்னனது ஆசிரியராகவும் விளங்கினர். பெரிய புராணம் பாடிய