பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தமிழ்நாடும் மொழியும்


சேக்கிழார், அநபாய சோழனின் பேரன்பைப் பெற்று அறங்கள் பல செய்தார். வெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் கம்பர் ஆதரிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. கொங்கு நாட்டைச் சேர்ந்த தலைக்காட்டை ஆண்ட கங்கர்கள் சிறந்த தமிழ்ப் பற்றுடையவர்கள். எனவே அவர்களும் தமிழ்ப் புலவர்களைப் போற்றி வாழ்ந்தனர். நன்னூலாசிரியர் பவணந்தி முனிவரை இக்கங்க அரசர்களில் ஒருவனை சீயகங்கன் ஆதரித்தான். கங்க அரசர்கள் அனைவரும் சைனர்கள். இவர்கள் நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நம்பியகப்பொருள், பெருங்கதை, வச்சணந்தி மாலை முதலிய நூல்களை இயற்று வித்த பெருமை உடையவர்கள். நளவெண்பா இயற்றிய புகழேந்தியை ஆதரித்தவன் சந்திரன்சுவர்க்கி என்பவனவான். பாண்டிய மன்னனது அமைச்சராகவும், தளபதியாகவும் விளங்கிய தஞ்சைவாணன், தஞ்சைவாணன் கோவை பாடிய பொய்யாமொழிப் புலவரைப் போற்றிப் புரந்தவனுவான். அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த சேந்தன் என்ற வள்ளுரல் திவாகர முனிவரைக் கொண்டு திவாகரம் என்னும் நிகண்டை இயற்றுவித்தார். இவ்வாறு இடைக்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் நன்கு போற்றப்பட்டதால் தமிழ் மொழி மேலும் வளர்ச்சிபெற்றது.

தமிழைப் போற்றிய பிற்காலக் குறுகில மன்னர்கள்

துலுக்கர், நாயக்கர், ஐரோப்பியர், மராட்டியர் போன்ற பல அயல் மக்கள் கி. பி. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்தை ஆண்டனர். இவர்களில் எவரும் சிறப்பாகத் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் போற்றிப் புரந்தது இல்லை. இந்த மக்கள் அகப்பட்ட வரையிலும் சுரண்டுவதிலேயே காலத்தைக் கழித்தனர். இக்காலத்தே தமிழைப் போற்றித் தமிழ்ப் புலவர்களைப் புரந்த