பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

223


பெருமை தமிழகத்துக் குறுநில மன்னர்களையே சாரும். பிற்காலத்தே தமிழை ஆதரித்த குறு நில மன்னர்களிலே குறிப்பிடத்தக்க பெருஞ் சிறப்புடையவர்கள் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்களாவர்.

இராம நாதபுர மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர் பலர்; இராமநாதபுர மன்னர்கள் புலவர்களுக்கு வழங்கிய நிலபுலன்கள் இன்றும் அப்புலவர்தம் பரம்பரையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாகத் தமிழ்ப் பணி செய்துவரும் மதுரைத் தமிழ்ச் சங்கம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரையவர்களால் ஏற்படுத்தப்பட்டது.

அமுத கவிராயர், அனந்த கவிராயர் என்போர் இரகுநாதசேதுபதி என்பவரால் ஆதரிக்கப்பட்டனர். அமுத கவிராயராற் செய்யப்பட்ட ஒருதுறைக் கோவை என்ற நூலின் பாடல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காய் உருட்டப்பட்டது என்பர். மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி பாடிய அனந்த கவிராயர் என்பவருக்கு மானூர், கலையூர் என்ற இரண்டு ஊர்களும் பரிசாகத் தரப்பட்டன சேதுபதியரசர் ஒருவரால். சவ்வாதுப் புலவர், சக்கரைப் புலவர் முதலிய பல புலவர்கள் இராமநாதபுரத்து மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனர்.

ஊற்றுமலை மருதப்பர் என்ற குறுநில மன்னரால் ஆதரிக்கப்பட்டவர், நன்னூல் உரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயராவார். தென் பாண்டி நாட்டிலே ஆட்சி புரிந்த வரதுங்கராம பாண்டியர், அதிவீரராம பாண்டியர், இவர்தம் மனைவியர் ஆகியோர் நல்ல தமிழ்ப் புலமையுடையவர்கள். இவர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர்கள் சிலர், தமிழ் நூற்களை எழுதினர். நெல்லை மயிலேறும்பெருமாள்