பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றிற்கு முற்பட்ட காலம்

21


இனி, புதிய கற்கால மனிதன் பேசிய மொழி யாது எனப் பார்ப்போம். புதிய கற்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தவர் யார்? பழைய கற்கால மக்களின் பரம்பரையினரே புதிய கற்காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து வந்தனர். இவர்கள் பேசிய மொழி திராவிட மொழியே.

புதிய கற்கால மக்களின் சமயம் சைவ சமயமாகும். புதிய கற்காலப் பொருட்கள் பலவற்றுள் சிவலிங்கமும் ஒன்றாகும். இலிங்க வழிபாடு என்பது திராவிடர்களுடையதே. வேத கால ஆரியர்கள் இலிங்க வழிபாட்டைக் குறிக்கவில்லை. ஆனால் திராவிடர்கள் இலிங்க வழிபாட்டைப் போற்றியுள்ளனர். எனவே புதிய கற்காலச் சமயம் சைவ சமயமாகும்.

புதிய கற்கால மக்கள் கூடி வாழத் தொடங்கியமையால் மக்கட் பெருக்கம் மிகுதியாயிற்று. இதன் காரணமாய் ஊர்களும் குடியிருப்புகளும் தோன்றலாயின. ஆங்காங்கே மக்கள் நிலைத்து வாழ ஆரம்பித்தனர். நிலத்தைப் பண்படுத்தி ஆற்று நீரைப் பாய்ச்சி வயல்களில் நெல் விளைவித்தனர். இந்நிலம் நன்செய் எனப்பட்டது. கபிலை ஏற்றம் முதலியவற்றால் நீர் பாய்ச்சப்பெற்ற நிலம் புன்செய் எனப்பட்டது. இந்நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டது. அதனின்றும் உடை நெய்யப்பட்டது. இவ்வாறு நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கிய காரணத்தால் மக்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். இதுவே நாளடைவில் அரச பதவியாயிற்று.

புதிய கற்காலம் போய் எத்தனையோ நூற்றாண்டுகளாய் விட்டன. ஆனால் அக்காலப் பழக்க வழக்கங்கள் இன்னும் நம்மை விட்டகலவில்லை. அக்கால மனிதன் போல் வில்லைக் கொண்டும் கல்லைக் கொண்டும் பறவைகளை அடிக்