பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

43


குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடன் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்" (பத்துப்பாட்டு)

தமிழகத்து முத்துக்கு மேலை நாட்டிலே நல்ல விலையிருந்தது. மேலை நாட்டு அழகிகள் தமிழகத்தின் முத்தின் மீது மாறாக்காதல் கொண்டு விளங்கினர். இதனால் ஏராளமான தங்கம் அந்நாடுகளிலிருந்து தமிழகத்திலே வந்து குவிந்தது. பிளினி எனும் ரோம வரலாற்றாசிரியன் ரோம் நாட்டுப் பெண்கள் முத்தின்மீது கொண்டுள்ள வெறியையும், அதனால் ஏராளமான பொன் செலவாவதையும் கண்டு மிகவும் மனம் புழுங்கினான். கையசு என்ற மன்னனின் மனைவியாகிய இலாசியசி என்பவள் ஒரு சாதாரண நிகழ்ச்சிக்கு 40,000,000 செச்ட்டர்கள் மதிப்புள்ள முத்தை அணிந்து கொண்டு வந்தாளாம். அதுமட்டுமல்ல; யாராவது அவள் அணிந்துள்ள முத்தின் விலையை வினவின் அதனை உடனே தெரிவிக்க அந்த முத்து விலைச்சீட்டை (Cash bill) யுங்கூட. உடன் கொண்டுவந்து இருந்தாளாம். இது பற்றிப் பிளினி மேலும் கூறுவதாவது:- "நமது ஆரணங்குகள் தங்களின் பெருமை காதிலும் கையிலும் ஒளிவிடும் முத்துக்களிலே இருப்பதாக எண்ணுகிறார்கள். முத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதினால் போதும். அவ்வளவுதான், நமது நங்கைகளின் உடல் பூரிப்படைகிறது. உள்ளம் களிப்பு வெள்ளத்திலே மிதக்கிறது. அதுமட்டுமல்ல; ஏழை எளியவர்கள் கூட அந்தச் செல்வமகளிரைப் பின்பற்றலாயினர். 'முத்தும் முடியுடை வேந்தனும் ஒன்றே. முத்தணிந்து செல்வோள் முன் முடியுடை வேந்தன் செல்வான்' என்பது மக்களின் எண்ணம். இதுமட்டுமல்ல; முத்தைப் பெண்டிர் பாதத்தில் அணிகின்றனர். செருப்பு முழுவதும் முத்தே நிறைந்