உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

73


என்பவன் உதயச்சந்திரனால் கொல்லப்பட்டான். இவையெல்லாம் உதயேந்திரப் பட்டயத்தில் நன்கு விளக்கப்படுகின்றன.

இதன் பின்னர் இராட்டிரகூடர்க்கும் பல்லவர்க்கும் போர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இராட்டிடரகூட மன்னன் தந்திதுர்க்கன் தன் மகளான ரேவாதேவியை நந்திவர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான். உதயச்சந்திரன் பல்லவ மன்னனுக்காகக் கீழைச் சாளுக்கிய நாடு, மேலைக் கங்கர் நாடு ஆகியவற்றின் சில பகுதிகளைப் பல்லவ நாட்டோடு சேர்த்தான். நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடி, கொற்றங்குடிப் பட்டயங்கள் இக்காலமக்களின் பண்பாட்டை அறியப் பெரிதும் உதவுகின்றன. அவனுடைய தண்டன் தோட்டப் பட்டயம் அவன் திருமால்மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துகிறது. திருமங்கையாழ்வார் இம்மன்னன் காலத்தவரே. காஞ்சியின் கண் உள்ள முக்தேசுவரர் கோவிலைக் கட்டியவன் இவனே.

சிறந்த கல்வியறிவும், அரசியல் அறிவும், படைக்கலப் பயிற்சியும், கலை ஆர்வமும், உதயச்சந்திரன் போன்ற திறமைமிக்க வீரர்களின் துணையும் பெற்று இரண்டாம் நந்திவர்மன் விளங்கியதால், பல்லவப் பெருநாடு பரப்பில் குறையாது, பல் வளங்களும் பெற்று, கலைகளுக்கு உறைவிடமாய் விளங்கியது. தன் ஆட்சிக் காலத்தில் பெரும்பகுதி போர் செய்வதில் கழிந்தாலும் நந்திவர்மன் இறுதிக் காலத்தில் கலைகளைப் பெரிதும் போற்றி வளர்த்தான்.

தந்திவர்மன் (கி. பி. 775-826)

நந்திவர்மப் பல்லவ மல்லனின் மகன் தந்திவர்மன் ஆவான். எனவே நந்திவர்மனுக்குப் பிறகு தந்திவர்மன் அரசனானான். தந்திவர்மன் என்பது தந்திவர்மனின் தாய்