பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

77


டம், நீர்நிலை, கோவில் இவை சம்பந்தமான பணிகளைக் கண்காணித்து வந்தனர். ஊரவை பல பிரிவுகளாகப் பிரிக் கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவும் வாரியம் எனப்பட்டது. ஊரவையார் பெருமக்கள் எனவும் அழைக்கப்பட்டனர். நீர் நிலையைக் கவனித்தவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனவும், தோட்டத்தைக் கவனித்தவர் தோட்டவாரியப் பெருமக்கள் எனவும், கோவில் திருப்பணிகளைக் கண்காணித்தவர் அமிர்தகணத்தார் எனவும் அழைக்கப்பட்டனர்.

பல்லவ மன்னர்கள் சிறந்த சமயப் பற்றுள்ளவர்களாய் விளங்கியதால், அவர்கள் நிலம், சிற்றூர் இவற்றைக் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்தனர். இவ்வாறு கொடுக்கப்பட்டது – ‘தேவதானம்' என வழங்கப்பட்டது. இந் நிலங்களுக்கு வரி இல்லை. சமண பௌத்தர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள் பள்ளிச்சந்தம் எனப்பட்டன. பிராமணர்க்கென்று உண்டான புதிய சிற்றூர்கள், பிரமபுரி, பிரம்ம தேசம், குடி, மங்கலம் என்று பெயரிடப்பட்டன. இவ்வூரவைகள் சபைகள் என அழைக்கப்பட்டன.

தென்னை, பனை, பாக்கு பயிரிட்டோர், மரிக்கொழுந்து, குவளை பயிரிட்டோர், கால்நடைகளால் பிழைப்பவர், புரோகிதர், சலவை செய்பவர், ஆடை நெய்பவர், ஆடை விற்பவர், கொல்லர், தரகர், நெய், பதநீர் விற்பவர், ஓடக்காரர் ஆகிய பலவகைத் தொழிலாளரும் அரசாங்கத்திற்கு வரி கொடுத்தனர். மக்கள் வரியினைப் பணமாகவோ அன்றிப் பண்டமாகவோ செலுத்தினர்.

நாட்டிலுள்ள நிலங்கள் அனைத்தும் செம்மையாக அளக்கப்பட்டன. அதன் பின்னரே வரி விதிக்கப்பட்டது. உழவுத்தொழில் உயர்ந்து விளங்கவேண்டும் என்பதற்காக, நாடு செழிக்கவேண்டும் என்பதற்காகப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டன; ஏரிகள் அமைக்கப்பட்டன. குழி, வேலி