பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

83


ராய் இறைவனுக்குப் பின்புறம் நிற்கின்றனர். இறைவியின் மடியில் தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருக்கின்றார். இதன் தென்புறச் சுவரில் சிற்பி வெகு அழகாக துர்க்கை அரிமா மீதேறி மகிடாசுரனோடு போர் புரியும் காட்சியினை வெகு அற்புதமாய்ச் செதுக்கி உள்ளான். இங்குள்ள சிற்ப வேலைகள் எல்லாம் சுவர்ச்சிற்பமாக அமைந்துள்ளன. இம்மண்டபத்தில் காணும் குறிப்பிடத் தகுந்த மற்றொரு காட்சி ஆயிரம் தலைகளோடு கூடிய ஆதிசேடன் மீது திருமால் அரிதுயில் கொள்வதாகச் செதுக்கி இருப்பதாகும்.

அடுத்து தெற்கே சென்றால் நாம் பார் புகழும் பஞ்ச பாண்டவர் இரதங்களைப் பார்க்கலாம். இவ்வைந்து விமானங்களும் ஒற்றைக்கல் கோவில்களாகும். இவற்றுள் பெரிதாக உள்ளது 'தருமராச இரதம்' என்று கூறப்படுகின்றது. இதன்கண் அழகிய வேலைப்பாடுகளைக் காணலாம். மாடப்புரைபோல் விளங்கும் இதன் கருப்பக் கிருகம் வெகு அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதன்கண் சோமாச்கந்த விக்கிரகம் அழகாக விளங்குகின்றது. பீமசேன இரதம் முன்னும் பின்னும் மண்டபங்கள் உள்ளன. திரெளபதி இரதத்தையும், அர்ச்சுனன் இரதத்தையும் முன்மண்டபம் ஒன்று ஒன்றாய் இணைக்கின்றது. இவற்றிற்கு முன்னால் ஒரே கல்லில் வெட்டிய மதகரி, அரியேறு இவற்றின் சிலையுருவங்கள் விளங்குகின்றன. திரௌபதி இரதத்தின் மூலத்தானத்தில் துர்க்கையின் படிமத்தைக் காணலாம். இச்சிலையின் கீழ் பக்தனொருவன் தன் சிரத்தைத் தானே துணித்துக் கொள்ளும் பாவனையில் ஒரு சிற்பம் உள்ளது. இந்த இரதக்கோவில் சிறு கூரை வீடு போல் காட்சி தருகிறது. நகுல சகாதேவ இரதங்கள் எனக் கூறப்படுபவை முற்றுப் பெறாதவையாகும்; இவ்வொற்றைக் கற்கோவில்கள் இரத வடிவமாக அமைந்திருப்பதால் மக்கள் இவற்றை இரதங்கள் என அழைத்தனர் போலும். மேலும்