பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

கொண்டு தமது மேன்மையை நிலைநாட்ட முயன்றுள்ளார்கள். தமது தொழில் கள்ளிறக்குதல் இல்லையென்றும் பொதி மாட்டு வணிகமே என்றும் கூறுகின்றனர். இத்தொழில்களில் முதலாவதைப் பெரும்பான்மையான ஏழை நாடார்கள் செய்து வந்தனர். இச்சாதியினரில் ஒரு சிறு பகுதியினர் வணிகமும் செய்து வந்தனர். அச்சிறு பகுதியினரின் கருத்துக்களையும் ஆர்வங்களையுமே இந்நூல் வெளியிடுகிறது. அவர்கள் தம்மையே பாண்டியர் மரபினர் என்றழைத்துக் கொண்டனர். நாயக்கர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து நாட்டைக் கவர்ந்து கொண்டதாக இவர்கள் சொல்லுகிறார்கள். இவர்கள் மிகவும் தாழ்ந்த சாதியினரென்று கருதப்பட்டதால் இவர்கள் தங்களோடு ஒத்தவர்களையும் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கவர்ந்துகொள்ளப் பல கருத்துக்களை உருவாக்கினர், நூலின் முகவுரையில், “இந்நூல் ஜாதி சம்பந்தமான நூல். ஜாதியெனவொன்று தோன்றிய காலத்திலிருந்தே அதனை அடியோடழிக்கும் கிளர்ச்சியும் தோன்றிவிட்டது. கபிலரகவல் இதற்குச் சான்று பகரும்” என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆயினும் இவர்களும் தங்கள் சாதி உற்பத்தியைக் கூறுமிடத்துப் புதிய கதைகளைப் புனைந்து கொண்டு தமக்குச் சிறப்புத் தேடிக்கொள்ள முயன்றார்கள்.

நாடார் திருமண வாழ்த்துக்கள் என்னும் நாட்டுப்பாடல் களில் இத்தகைய கதைகளைக் காணலாம்.

1 உயர்ந்த சிங்கக் கொடியாதிபதி,
    சம்பரனை வென்று இரட்டைச் சங்கேந்தினோன்,
    ஈழம் திறை கொண்டோன்,
    இலங்காபுரி வேந்தன்,
    செட்டி தோளேறும் பெருமாள்,
    வாழைக் கிருதலை வரக்கண்டோன்
    பத்திரகாளி வரபுத்திரன்.10

2 பஞ்சதிராவிட முதல்வன்,
    பரம்பரைப் பாண்டிய நாடன்,
    கல்விச் சங்கமுடையவன்,
    காசு முத்திரை விடுத்தவன்,
    சபத கன்னி புத்திரன்,
    தமிழைக் குறுமுனிக் குரைத்தவன்.11

தங்கள் குலத்தின் உயர்வை இவ்வாறு இப்பாடலில் அவர் கள் கூறுகிறார்கள்.