பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

யமும் செய்து நாகரிக வாழ்க்கைக்கும் வாணிக வளர்ச்சிக்கும் துணைபுரிந்தனர். கன்னார்கள் செம்பில் பாத்திரங்களும் கருவிகளும் செய்து சமுதாய - வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை எல்லாச் சாதியினருக்கும் அளித்தனர். இவர்களனைவரும் சமுதாயத்திற்குத் தேவையான உழைப்பை, சமுதாயத்திற்கு அளித்து வந்தனர்.

ஆனால் மேல் சாதியார் இவர்களைத் தங்களுக்கு ஊழியம் புரியும் கடப்பாடுடைய சூத்திரர்களாக மதித்தனர். உழைப்பை இழிவாகக் கருதிய பிராமணரும் பிறருழைப்பில் வாழும் நிலக்கிழார்களும் இவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக, உழைப்பதற்காகவே பிறந்து வாழ்வதாகக் கருதினர்.21 அதற்காகவே பல கருத்துக்களை உருவாக்கினர்.

உழைப்பாளிகளான பஞ்சகருமார்கள் இக்கொடுமைகளை எதிர்த்தனர். பல விதங்களில் அநீதியை எதிர்த்துச் சாதி சமத்துவத்திற்காகப் போராடினர்.

இப்போராட்டங்களின் போது கருத்துக்களையும் கொள்கைகளையும், பழைமையான சாதி சமத்துவச் சிந்தனைகளிலிருந்தும் புதுமையான தருக்கங்களிலிருந்தும் உருவாக்கிக் கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட வழக்கு, ஆசாரிகள் குலத்தில் திருமணத்தை நடத்தி வைக்க பிராமணர்களுக்கு உரிமையுண்டா அல்லது ஆசாரிகள் குலத்தைச் சேர்ந்த பெரியவர்களுக்கு உரிமையுண்டா என்ற பிரச்சினை பற்றி எழுந்தது. இதனைப் பற்றிச் ‘சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு’ என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது:

சித்தூர் மில்லாவைச் சேர்ந்த சதுர்ப்பேரியில் விஸ்வப் பிரமம் வம்சத்தில் பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி முதலியவர்கள் நடத்துகிற விவாகஸ்தம்பப் பிரதிஷ்டை வைபவத்தில் பஞ்சாங்கம் குண்டையன் முதலான விப்பிராள் கும்பல் கூடி வந்து ஆட்சேபனை செய்தார்கள். அவன் போதனைக்குட்பட்டு வந்த புத்திமான்கள், இந்தப் பஞ்சாங்கக் குண்டைனை நீக்கி நீங்கள் வேத விதிப்படி விவாகஞ் செய்ய யத்தனித்தபடியால் இந்தப் பஞ்சாங்கக் குண்டையன் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் வேத சுருதிப் பிரமாணப் படிக்கு உத்திரவு கொடுத்து உங்களினத்தில் உபாத்தியாயரை வைத்து விவாகஞ் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் மேற்படி குண்டையனைக் கொண்டு விலாகம் நடத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்ன தன் பேரில் பஞ்சாங்கக் குண்டையனுக்கும் மார்க்க சகாயம்