பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

21

தொட்டாசாரி
எக்கிய தீட்சிதர்
வியாச பட்டர்
சூரியநாராயண சாஸ்திரி
ஜோசி சாஸ்திரி
வந்தவாசி சிரஸ்தாரய்யர்

வக்கீல்-அருணாசல முதலி

பிரதிவாதிகள் பக்கம் தாஸ்தாவேசுகளாகத் தாக்கல் இல்லை.

விசாரணை சாட்சிகள்

ஆண்டியப்ப முதலி
சங்கரநாராயண செட்டி
கோபி செட்டி அ
ப்பாசாமி பிள்ளை
வெங்கடசுப்பு நாயக்கன்.

வாதிகள் பிராது

பஞ்சமுகப் பிரம்மாவினுடைய சத்தியோ ஜாலமுகத்தில் ஸாநகரிஷியும் வாமதேவ முகத்தில் ஸநாதனரிஷியும் அகோர முகத்தில் அபுவநஸரிஷியும் தற்புருஷமுகத்தில் பிரத்நஸ்ரிஷியும் ஈசாந முகத்தில் ஸுபர்நஸரிஷியும் இந்த ஐந்து பேரும் பஞ்சமுகத்தில் உற்பவித்த பிரம்ம ரிஷிகளின் வம்சஸ்தர்களாகிய தாங்களே பிராமணாளென்று பாத்தியஞ் சுருதி வாக்கியப் படிக்கும் வழக்கப்படிக்கும் தங்களில் 1, 2, 3 வாதிகளுடைய வீட்டில் விவாக முகூர்த்தங்கள் நடக்கும் பொருட்டாய் தாங்களனைவரும் யத்தனப் பட்டுக்கொண்டிருக்கையில் சங்கர சாதிகளான பிரதிவாதிகள் துராக்கிருதமாய் பிரவேசித்து, தாங்களே வேதோக்தப் பிரகாரம் நடப்பிவிக்கக் கூடாதென்றும், புரானோக்தமாய், தாங்களே நடத்தி வைக்கிறதாயும், சொல்லித் தாங்கள் கும்பல் கூடி அடித்து விவாக முகூர்த்தம் நிறைவேறாமல் தடங்கல் செய்து போட்டதாயும், அது சங்கதிகளைக் குறித்து மேற்படி ஜில்லா மாஜிஸ்திரேட்டுத் துரையவர்களிடத்தில் தாங்கள் பிரியாது கொடுத்ததற்கு அவர்களை விசாரணை செய்து பிரதிவாதிகளுக்குத் தகுமான தண்டனை கொடுத்து நஷ்டத்தைக் குறித்து ஜில்லாவில் பிராது செய்து கொள்ளும் படியாய் டைரி நகல் கொடுத்திருப்பதாகவும் ஆனதால் பிரதி வாதிகளால் கலியாண சாமக்கிரியை ரூபாய் 550-ம் வாங்கிக் கொடுக்கம்படியாயும், வாதிகளாகிய தாங்கள் இனி மேல் நடப்-