பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்


பாரத முதலான கற்பனைப் புராணங்களில் விஸ்வப்பிரம்மாவைக் கொஞ்சம் நிக்ருஷ்டமாய் எழுதியிருப்பதைப் பார்த்து பிரதிவாதிகள் மனஞ் சகிக்கமாட்டாமல் தூஷித்துப் புராணக் கட்டுக்கதைகள் செய்திருக்கிறார்கள். அப்படியிருந்த் போதைக்கும் சகல சாஸ்திரங்களுக்கும் சாட்சியாயிருக்கிற ஆதி வேதங்கள் சிரேஷ்டமாயிருப்பதால் புராணங்களின் கட்டுக் கதைகள் உபயோகப்படமாட்டாது.

9 பிராதில் கண்டபடிக்கு வாதிகளைப் பிரதிவாதிகள் கும்படி கூடியடித்து கலியான முகூர்த்தங்களை நடவாமல் தடங்கல் செய்து குந்தகப்படுத்தினதாகவும் வாதிகள் சாட்சி தாகோஜிராவ், சுப்பராய முதலி, வெங்கட்ராம நாயக்கன் முதலான பதினைந்து பேர்களாலும் மாஜிஸ்டிரேட் டைரியி னாலும் ருசுவாகியிருக்கிறதினால் கலியான சாமக் கிரியை நஷ்டம் ரூபாய் 550-ம் இதற்கடியில் காண்கிற செலவுகளும் வாதிகளுக்குப் பிரதிவாதிகள் கொடுக்கும்படியும், வாதிகள். தங்களுக்குண்டாயிருக்கிற பாத்தியப்படிக்கு வேதபாராயண முதலியதுஞ் செய்து கொண்டு சகல கிரியைகளும் தாராளமாய்' நடத்திக் கொண்டு வரும்படியாயும் அதில் பிரதிவாதிகள் பிரவேசிக்கக் கூடாதெனவும் தீர்மானிக்கலாச்சுது.

இந்தப்படிக்கு 1818 டிசம்பர் 15 தேதி

சித்தூர் ஜில்லா அதலாத்து கோர்ட்டாருடைய தீர்மானம்

அசலுக்குச் சரியான நகல்

***

மேற்கூறிய வழக்கு விவரங்களும் தீர்ப்பும் சாதி சமத்து வப் போராட்டத்தில், சமத்துவம் கோருவோரது கருத்துக் களையும் அதனை மறுப்போரது கருத்துக்களையும் தெளி வாகக் கூறுகின்றன.

சமத்துவம் கோருவோர் யசுர் வேதத்திலிருந்து தங்கள் உற்பவத்திற்கு மேற்கோள் காட்டுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? யசுர் வேதப் பாடல்கள் தோன்றிய காலத் தில் ரிக்வேத காலத்தைப் பார்க்கிலும் உற்பத்திச் சக்திகள் அதிகரித்துவிட்டன. உலோகக் கருவிகளும் மரக் கருவி களும் தோன்றிவிட்டன. அவற்றைப் பயன்படுத்தி மனிதன் ரிக்வேத காலத்தைப் பார்க்கினும் வளப்பமான வாழ்க்கையைப் படைத்துக்கொண்டான்.

ரிக்வேத காலத்தில் இயற்கைச் சக்திகளைக் கடவுளர் களாக வழிபட்ட மனிதன், யசுர் வேத காலத்தில் தனது புதிய படைப்பாற்றலையே தெய்வமாக வழிபடத் தொடங்கினான்.