பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

27


இதனையே பிரம்மமென்றும் பஞ்சமுகப் பிரம்மமென்றும் பஞ்ச கிருத்யங்களையே பிரம்மாவின் படைப்புத் தொழிலென் றும் கருதத் தொடங்கினான். ரிக்வேதத்தின் பிற்பகுதியில், பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட புருஷ சூக்தத்தில் கூட்டுண்ணும் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிரபஞ்ச உற்பவத்தையும் உயிர்களின் உற்பவத்தையும் விளக்க முயன்றான். யக்ஞம் என்பது கூட்டு வாழ்க்கையில் வழி பாட்டு முறை. கூட்டுணவு வாழ்க்கை முறையில் மனிதர்களை ஒரு கூட்டு நிறுவனமாக உணர்ச்சியால் இணைக்கும் சடங்கு (ritual) அது

புருஷ சூக்தமே பிற்கால வருணாசிரமப் பிரிவுகளில் உயர்வு தாழ்வுகளைக் கற்பிப்பதற்குக் காரணமாயிற்று. வருணாசிரமப் பிரிவினைகளின் ஆரம்ப காலத்தில் புருஷ சூக்தம் எழுந்தது. எல்லா வருணங்களும் ஒரே மூலப்பொரு ளான கூட்டமைப்பினின்றும் தோன்றியது என்பதையே அது உருவகமாகக் கூறுகிறது.

புருஷ சூக்தத்தின் சில பகுதிகளில் வருணத் தோற்றுவாய் கூறப்பட்டுள்ளது. நமது ஆய்விற்கு அவை அவசியமாகை யால் அவற்றை இங்கு தருவோம்.”

***

இருக்கு வேதம்

8-வது அஷ்டம்

புருஷ சூக்தம்

இருடி - நாராயணன்

தேவதை - விராட் புருஷன்

சந்தசு - முதலில் அனுஷ்குபு, முடிவில் திருஷ்டிபு

விஷயம் - சிருஷ்டி

விராட் புருஷ சொரூபம்

விராட் புருஷனுக்கு ஆயிரம் சிரசுகளாம், ஆயிரம் கண் களாம், ஆயிரம் கால்களாம், அவன் பூமி முழுதும் வியாபித்து 10 அங்குலப் பிரமாணமுள்ள தேகத்தையுடையவனாக விருந்தான்.

புருஷனே உலக முழுதுமாம். பூத காலம், பவிஷிய காலம் யாவும் அவனேயாம். உணவினாற் பருத்து அழியாதிருப்ப தற்கும் அவனே கருத்தனாம்.

இவ்வளவும் இவன் மகிமையேயாம். இவன் உத்தம புருஷனும் மூத்தோனுமாம். சர்வ.பூதங்களும் இவனிற்காற்.