பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

கூறாம். அழிவற்றதும் சுயம் பிரகாசமுள்ளதுமானவை இவனில் முக்காற் கூறாம்.

புருஷனது முக்காற் கூறும் ஆதியில் மிகவும் நிர்மலமாய் இருந்தது. அவனில் காற்கூறு மீளவும் சிருஷ்டி, ஸ்திதி, தாசவித்தம் மாயா ரூபத்தையடைந்தது. அந்த மாயா ரூபத்தையடைந்த பின் சேதனா சேதங்களைக் குறித்து எங்கும் நானா விதமாய் வியாபித்தது.

அந்தப் பரமாத்மாவிலிருந்து பிரம்மாண்டாதி தேகமுண் டாயிற்று. தேகத்தையே காரணமாகக் கொண்டு பின்னர் அந்தத் தேகாபிமானியான புருஷன் உண்டானான். அங்ங்ன முண்டான அந்த விராட் சொரூபி தன்னின் வேறான தேவ மனுஷ்ய திரியக்கு முதலிய ஸ்வரூபத்தை அடைந்தார். பின்னர் பூமியையும் அதிலுள்ள சீவர்களுக்குத் தேகத்தையும் உண்டாக்கினார்.

பின்னர் தேவர்கள் அந்தப் புருஷனைப் பலியிடும்படி யாகஞ் செய்தார்கள். அப்போது வசந்த காலம் அதற்கு நெய் யாகவும் கோடைகாலம் அதற்குச் சமித்து அல்லது விறகாகவும் சரத்காலம் நிவேதனம் அல்லது அவிசாகவும் இருந்தன.

பலிபீடத்தைச் சூழ ஏழு அக்கினி அல்லது ஒமகுண்டங் களிருந்தன. அவ்விடத்து மூவேழுசமித்து அல்லது விறகுகள் உண்டாக்கப்பட்டன. இவ்விதம் தேவர்கள் யாகம் செய்த போது புருஷனைப் பலியிடும்படி பசுவாகக் கட்டினார்கள்.

அவர்கள் ஆதியிற் பிறந்த புருஷனைப் பலியாக்கி தெற்பை யின் மேல் இட்டார்கள். தேவர்கள், சாத்யர்கள், ரிஷிகளாகிய இவர்கள் அவனைத் தங்களுக்கு அவிசாகக் கொண்டார்கள்.

அந்த யக்ஞமாகிய சர்வ பலியினின்றும் தயிரும் நெய்யும் உண்டாயின. காட்டிலும் நாட்டிலுமுள்ள வாயுவினை அதி தேவதையாகவுடைய மிருகங்களை அந்தப் புருஷன் உண்டாக் கினார்.

அந்த யாகமாகிய சர்வ பலியினின்றும் இருக்கும் சாமமும் உண்டாயின. பின்னும் அதனின்று காயத்திரியாதி சந்தசும் யசுர் வேதமும் உண்டாயின.

அந்த யாகத்தினின்று அசுவங்களும் இரண்டு வரிசைப் பற் களுள்ள சகல மிருகங்களும் உண்டாயின. பின்னும் அதனின்று பசுக்களும், பின்னும் அதனின்று செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உண்டாயின.

அவர்கள் புருஷனைப் பலியாக்கினபோது அவனை எத்தனை கண்டங்களாகப் பாகித்தார்கள்? அவன் முகம் என்ன வாயிற்று? அவன் புஜங்கள் எவ்வாறாயின? அவன் துடை களும் பாதங்களும் எப்பெயர் கொண்டன?