பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

29


பிராம்மணன் அவன் முகமாயினான். இராஜன் அவன் புயங்களாயினான். வைசியன் அவன் துடைகளாயினான். சூத்திரன் அவன் பாதங்களில் உதித்தான்.

சந்திரன் அவன் மனத்திலுண்டாயினான். சூரியன் அவன் கண்களில் உண்டானான். இத்திரனும் அக்கினியும் அவன் முகத்திலிருந்து உண்டாயினர். வாயு அவன் சுவாசத்தில் உதித்தான்.

அவன் நாபியில் அந்தரம் அல்லது வெளி உண்டாயிற்று. அவன் சிரசில் வானமுண்டாயிற்று. அவன் பாதங்களில் பூமியும் காதில் திக்குகளும் உண்டாயின. இல்விதமாக உலகங். களுண்டாயின.

***

இந்தப் பகுதிகள் உலக உற்பத்திக் கதையைச் சொல்லு, கின்றன. சிறு குழுக்கள் பெருகி வேலைப் பிரிவினைகள் தோன்றிய காலத்தில் இப்பாடல்கள் எழுந்திருக்கவேண்டும். சிறுகுழு வாழ்க்கையில்-முக்கியமாகக் கால்நடை வளர்ப்பு வாழ்க்கையில் கூட்டுணர்வை ஏற்படுத்த நடத்திய இனக் குழுச் சடங்குகள் யக்ஞமும் பாகமும், யக்ஞம் சிறிய அளவில் நடை பெற்றது. யாகம் பல குழுவினர் சேர்ந்து நடத்தியது. அக். காலத்தில் ஒவ்வொரு வாழ்க்கைத் தேவைக்கும் ஒவ்வொரு சக்தியை வழிபடுவதற்காக யக்ஞம் நடத்தினர். வளர்ச்சி யடைந்த கட்டத்தில் சிந்தனையும் விசாலமடைந்தது. வேலைப் பிரினை தோன்றிவிட்ட நிலையில் உலக சிருஷ்டியை அவர்கள் கற்பனை செய்து ஒரு கதையை உருவாக்கினர். அதுவே புருதை சூக்தம்.

ரிக்வேத ஆரியர்கள், தங்கள் பசு நிரைகளும் ஆட்டு மத்தை களும் குதிரைகளும் பெருகுவதற்காகப் பசுவையும் ஆட்டை யும் குதிரையையும் பலி கொடுத்தார்கள். ஜனத்தொகை பெருகுவதற்காக மனிதனைப் பலியிட்டார்கள். இச்செயல் களால் தாங்கள் விரும்பியவை கிடைக்கும் என்று நம்பினார் கள். இந்நம்பிக்கைகள் இன்றும் கீழ்நிலைச் சமுதாய வளர்ச்சி களிலுள்ள இனக்குழு மக்களிடையே காணப்படுகின்றன. ஒரு மகாபலியின் மூலமே பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டு மென்று அவர்கள் எண்ணினார்கள். அதன் மூலமே ஒன்றா யிருந்த சமுதாயம் நான்காகப் பிரிந்ததென்றும் எண்ணின்ர். புருஷசூக்தம் இச்சிந்தனையின் கலை வெளிப்பாடே. இச் சிந்தனையிலும் உயர்வு தாழ்வு எதுவும் வர்க்கப் பிரிவுகளுக்குக் கற்பிக்கப்படவில்லை.