பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

போட்டுக்கொண்டு வந்து அக்காலத்திலிருந்த அவிவேக துரைத்தனத்தாருக்கும் விஸ்வப் பிரம்ம வம்சத்தாருக்கும் அஷ்ட கருமங்களால் மித்திர பேதஞ்செய்து அரசனைச் சார்ந்தார்களெல்லாம் வலங்கையென்றும் கம்மாளரை இடங்கையென்றும் ஒருவரிடத்தில் ஒருவர் சாப்பிடக் கூடா தென்றும் தங்கள் வீட்டில் மாத்திரம் சகலரும் சாப்பிடலா மென்றும் ஏற்பாடு செய்தீர்கள். அக்காலத்தில் உங்களை இன்னாரென்றறியாத சிலர் சாப்பிட்ட போதிலும், உங்கள் வம்ச பரம்பரையறிந்த ரஜபுத்திரர், பொந்திலி யர், லாலாக்கள், குசிலாத்தியர், மராட்டியர், கன்னடியர், வீரசைவர், ஜைந வேளாளர், பட்டு நூற்காரர், சாத்தானி யர், வள்ளுவர், துலுக்கர், மலுக்கர் முதலானவர் உங்கள் வீட்டில் இன்னுஞ் சாப்பிடுகிறதில்லையன்றோ? ஆனால் இக்காலத்தில் உங்களை அறியாதவர் சிலர் சாப்பிடுகிறார் கள். பஞ்ச கவுடாள், பஞ்ச திரவிடாள் உங்கள் வீட்டில் சாப்பிடாததற்குக் காரணம் என்ன? நீங்கள் விப்பிரர் களென்ற காரணமின்றி வேறொன்றுமில்லையே; சில சாதி கள் உங்களுடைய துர்ப்போதனைக்குட்பட்டு சாப்பிட்ட போதிலும் நீங்கள் பிரம்ம குலமென்று சொல்வது உண்மை யாகப்படமாட்டாது. அப்படி நீங்கள் பிரம்ம குலமானால் பஞ்ச கிர்த்தியத்தில் (ஐந்து தொழில்) ஏதாவது ஒன்றை யாவது செய்யவேண்டுமே! ஒன்றுந் தெரியாமல் ஜோகி, ஜங்கமரைப் போல் யாசகஞ் செய்கிற கிராம பாச்சகர் களாகிய உங்களை பிரம்மவம்சமென்று யார்தான் சொல்லு வார்கள்? தெரிந்தவர்கள் ஒருக்காலும் சொல்லார் களல்லவா?

இங்கு உணவு கொள்ளும் உலக வழக்கத்திலிருந்து உயர்வு தாழ்வுகளைப்பற்றி விவாதம் நடக்கிறது. இடங்கை, வலங்கைச் சாதிப் பிரிவுகள் ஒரு பிரிவினர் வீட்டில் மற்றொரு பிரிவினர் உண்ணலாகாது என்ற தடையும் பிராமணரால் விதிக்கப்பட்டவை என்று மா. ச. ஆசாரி கூறுகிறார்.

இடங்கை, வலங்கை வரலாற்றை இவர் இங்குக் குறிப்பிடு கிறார். இப்பிரிவுகளின் தன்மையை அறிந்து கொள்வதற்குச் சோழர் காலத்துச் சாசனங்கள் சில துணைபுரிகின்றன. இச் சாசனங்களைப் பற்றித் தி. நா. சுப்பிரமணியன் பின்வருமாறு கூறுகிறார்:

திருச்சிராப்பள்ளி ஆடுதுறைக் கல்வெட்டு அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர் பிராம்மணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து