பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்


வராகவும் காணப்படுகின்றனர்.செட்டி, சேணியன், கைக் கோளன், தச்சன் முதலிய கம்மாளர்கள் இடங்கையர். நிலச்சுவான் சாதிகள், பள்ளர், பறையர் முதலியோர் வலங்கையர்.

வலங்கைச் சாதிகளில் நிலப்பிரபுக்கள் தலைமை பெற்றி ருந்தனர். அவர்கள் நிலத்தில் உழைப்போரின் உழைப்பில் வாழ்வோர். இடங்கைச் சாதிகளில் தலைமை பெற்றிருந்த பெருவணிகர் கைத்தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி வாழ்வோர். சமூக-அரசியல் ஆதிக்கப் போராட்டங்களில் நிலப்பிரபுக்கள் வலங்கைச் சாதியினரைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டு, வணிகர்களைத் தாக்கியபொழுது, அவர்கள் இடங் கைச் சாதியினரைத் தம் பக்கம் சேர்த்துக்கொண்டனர். நிலப் பிரபுக்கள், வணிகரது கூட்டுச் சுரண்டலை எதிர்க்க உழைப் பாளி மக்கள் ஒன்றுபடவிடாது, இவர்கள் சிறு உரிமைகளுக் காக இச்சாதிகளில் தாழ்ந்தவர்களை மோதவிட்டுக் கொண் டிருந்தனர்.

உண்மையில் மேற்குறித்த சாசனச் செய்திகளை நோக்கும் பொழுது, அநீதியான வரிகளையும் சமூக அடக்குமுறைகளை யும் எதிர்த்து இடங்கை வகுப்பினர் போராடியுள்ளனர் என்பது தெளிவாகிறது. அவர்களுடன் வலங்கைக் கீழ்ச் சாதியினர் வர்க்க ரீதியாகச் சேர்ந்துவிடாமலிருக்கவே இச் சாதிப் பிரிவுகளையும் சச்சரவுகளையும் உயர் வர்க்கத்தினர் கிளப்பிவிட்டனர். இதற்குரிய புதிய கதைகளைப் பிராமணர் கள் எழுதிக் கொடுத்தனர். எனவே இப்பிரிவுகள், தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள உயர் வர்க்கத்தினர் படைத்ததேயன்றி பிராமணர் சிருஷ்டியல்ல. ஆனால் பிராமணர்கள் தமது அறிவால் இவ்வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கப் புராணங்களையும் நீதி நூல்களையும் எழுதினர்.

இடங்கை, வலங்கைப் பிரிவுகளைப் பற்றி நிலப்பிரபுத் துவத் தன்மை கொண்ட வேளாளர் பெருமையை விளக்கும் "வருண சிந்தாமணி’ என்னும் நூல் கீழ்வரும் கதையைச் சொல்லுகிறது.

காஞ்ச நகரைக் கொடுங்கோலனும் காமுகனுமான மதன பூபதி ஆண்டு வந்தான். அக்காலத்தில் கற்புக்கரசியான வேதவல்லி என்பவளைப் பலவந்தஞ் செய்தான். அவள் அவ மானத்தினால் உயிர் குன்றித் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் நாட்டவர் எல்லோரும் அந்நகரை விட்டு வெளி யேறிப் போய்விட்டனர். அவ்வரசனும் அவன் குடும்பமும் ஒருங்கேயழிந்தன. நாடும் மண்மேடிட்டு, புல் பூண்டுக்ளும் இன்றி வெட்டவெளியாகிவிட்டது.