பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

37

சிறிது காலத்திற்குப் பின் காட்டுச் சாதியாரான குறும்பர் கள் அங்கு ஆடு மேய்க்க வந்து குடியேறினர். பின்னர் பல சனங்களும் வந்து சிற்றுார்கள் தோன்றின. பிற நாடுக்ளுக்குச் சென்றுவிட்ட வேளாளர், கவரை செட்டி, வாணிகர் முதலிய பலரும் வந்து சேர்ந்தனர். காடாயிருந்த இடமெல்லாம் நாடா யிற்று. அங்குள்ள மக்களுக்கு அரசில்லாமையால் குல தருமங் களை நடத்த முடியாமல் இருந்தது. சம்பாதித்த பொருளை அநுபவிக்க முடியாமல் இருந்தது. கன்னம், களவு, கொள்ளை முதலியவற்றால் இடர்பட்டு வணிகம் நடத்த முடியவில்லை.

இனி வருண சிந்தாமணியிலுள்ளபடியே மேற்கொண்டு கதையைச் சொல்லுவோம்:

அங்ங்ணம் நேர்ந்த காலத்தில் விவேகிகளாயுள்ளவர் கள் நாம் எல்லோரும் கூடி நம்முள் ஒரு எசமானை ஏற்படுத்திக் கொண்டு அவனுக்கு உலகியலை நடத்த அதிகாரங்களைக் கொடுத்து அவனது கட்டளையின்படி நாம் நடக்க வேண்டுமென்று ஏற்பாடுகள் செய்தால் நாம் இவ்விடத்தில் சுகசீவனம் செய்யலாமென்று சொன்னார் கள். இது நல்ல காரியமே. இப்படிச் செய்வது எங்களெல் லோருக்கும் சம்மதம் என்று சொன்னார்கள்.

இதை எல்லோரும் கேட்டு சந்தோஷம் கொண்டு ஒருங்கே எல்லா நற்குணங்களுமுடையவன் எக்குடியி லிருக்கிறான் என்று விசாரிக்கவே அதில் ஒருவன் இவையெல்லாம் வேளாண் குடியில் காணலாம் என் றான். இன்னும் இவ்வேளாண் குடிபிறப்பினர் நடு நின்று எவ்வுயிர்க்கும் துகர்ச்சி வருவித்தலும், பகை புலன் முறுக்கிப் பாதுகாத்தலும் திருவிற் பொலிந்த சிறப்புடை மையும், இன்சுவையமுதம் இரந்தோர்க்கீதலும், பூமகட்கு உரிமை பூண்டு நிற்றலும் சத்துவத் தனிக்குணத்திலே பயிறலும், ஊக்கமும் செவ்வியும் உடையார் என ஆன்றோர் வாக்கானும் அறிந்திருக்கிறோம் என்றான்.

மகாசனங்கள் எல்லோரும் கூடி சற்று நேரம் ஆலோசித்து இக்குணாதியம் உள்ளோர். வேளாளரென்று சர்வ சம்மதாய் ஒப்புக் கொண்டு அக்குடியிலுள்ள சகல நற்குணங்களும் உள்ள ஒரு பிரபுவைக் குறிப்பிட்டு இவரே நமக்கெல்லாம் முதன்மையாய் இருந்து அதிகாரம் செலுத்தி, நம்மையாள வேண்டும் என்று அவருக்குப் பட்டங் கட்டினார்கள். அன்று முதல் அவருக்கு முதலியார் என்று பட்டப் பெயர் வந்தது. இப்பெயர் இக்காலத்தும் அவர் மரபிலுள்ளார்க்கும் வழங்கி வருகிறது,