பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்



அது அங்ங்ணமிருப்ப இதைக் கண்ட கம்மாளர்கள் அழுக்காறுடையவர்களாய் இவ்வேளாளருக்கு நாம் அடங்கி நடக்கிறதா? நாம் இவர்களை எதிர்த்தால் வெல்ல மாட்டோம், இம்மனிதருக்குள் சிலரைக் கலகப்படுத்தி கட்சியேற்படுத்திக் கொண்டு அவர்களை முன்னாகச் செல்லவிட்டு நாம் பின்னிருந்து வேளாளருக்குக் கொடுத்த அதிகாரத்தை மாற்ற வேண்டுமென நினைத்து வியாபாரச் செட்டிகளைக் கூட்டி நீங்கள் செல்வந்தர்களாயிருந்தும், வேளாளர் பட்டங்கட்டி ஆள நாம் அவர்களுக்குக் கீழ்ப் படிந்து நடக்கிறதா என்று சொல்லவே, வியாபாரச் செட்டிகள் அதற்கு என்ன செய்கிறதென்றார்கள். நீங்கள் பொருளைச் செலவிடும் பட்சத்தில் மகாஜனங்களை யெல்லாம் நம்முடைய பட்சம் திருப்பிக்கொண்டு அவ் வேளாளர்களுக்குக் கொடுத்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுக்கும்படி செய்விக்கிறோம்; நீங்கள் எஜமானாக ஆளலாம் எனவே, அவர்களும் அதை நம்பி தங்களிடம் உண்டான திரவியங்களை வாரி விட்டார்கள். அத்திரவி யங்களைப் பெற்று சொற்செல்லுதலையுடைய சனங்களுக் கெல்லாம் வேண்டுமான வரை கையடை கட்டுகிறோம். அவ்வதிகாரத்தை வியாபாரச் செட்டிகளுக்கு மாற்ற வேண்டும் என்றார்கள். அதற்குச் சிலர் உடன்பட்டும் சிலர் உடன்படாமலும் வெகுஜனக் கூட்டங்களுக்குள் இரண்டு கட்சி உண்டாயின. வேளாளருக்கு குடியரசுப் பட்டம் கொடுக்க வேண்டுமென்ற கட்சிக்காரர்கள் யாவர் எனின் கவரைகள், இரெட்டிகள், கம்மவாரு, கொந் தளவர், நத்தமான், மலையமான், கோமுட்டி, இடையர், சாலியர், சேணியர், பட்டு நூற்காரர், சேடர், செக்கு வாணியர், எருத்து வாணியர், இலை வாணியர், ஜனப்பர், முச்சிலியர், காஞ்சியார், வேதகாரர், ஜோசியர், குயவர், மேளகாரர், நட்டுவர், தாசிகள், ஈட்டியர், குறவர், சுக்கார், செட்டி, லம்பாடிகள், வேட்டைக்காரர், பட்டண வர், ஒட்டவர், உப்பரவர், போகி, பணி செய்வோர், வண் ணார், நாவிதர், பூசாரி, இருளர், பறையர், வெட்டியான்.

வியாபாரச் செட்டிகளுக்குக் குடியரசுப் பட்டங் கொடுக்க வேண்டுமென்ற கட்சிக்காரர்கள் கைக்கோளர், கம்மாளர், பள்ளிகள். வேளாளர் கட்சி பலத்ததனால் வலங்கையென்றும், வியாபாரச் செட்டி கட்சி இளைத்ததனால் இடங்கை என்றும் பெயராயின. வேளாளருக்காக கூடிய கூட்டம் வலுத்ததனால் அந்தப்பட்டம் வேளாளருக்கே நிலைத்தது.