பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

காலம் பண்டைச் சோழர்கள் காலம். அக்காலத்தில் இடங்கை–வலங்கைச் சாதிப் பிரிவுகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இல்லை. குடியரசுப்பதவி, இளங்கோப்பதவியென்ற அதிகாரப் பதவிகள் எக்காலத்திலும் இருந்ததில்லை. அரசனது ஆணையின் கீழ் பணிபுரிந்த நாடன், நாடாள்வான், நாட்டதிகாரிகள் முதலிய பதவிகளே பிற்காலச் சோழர் காலத்திலிருந்தன. பிற்காலச் சோழர் காலத்துச் சாசனங்களில்தான் இடங்கை, வலங்கை வகுப்பினரைப் பற்றியும் அவர்களிடையே நடை பெற்ற கலகங்களைப் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன. அச்சாதிகளின் பெயர்களையும் இச்சாசனங்கள் குறிப்பிடு கின்றன. அச்சாதிகளில் வலங்கைச் சாதிகள் நிலப்பிரபுக்களோடும் நிலத்தோடும் தொடர்புடையவர்களெனவும் இடங்கையர் வணிகர்களோடும் கைத்தொழில்களோடும் தொடர்புடையவர்கள் எனவும் முன்னரே குறிப்பிட்டேன். ஆனால் இக்கதையில் சான்றுகளுக்கு மாறான முறையில் பல சாதிப் பெயர்கள் வலங்கைச் சாதிகளென்று கூறப்பட்டுள்ளன. தவிர, கதை நிகழ்ச்சிகள் நடந்ததாகச் சொல்லப்படும் கால மான பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் கவரைகள், ரெட்டிகள், கம்மவாரு, கோமுட்டி முதலிய தெலுங்குச் சாதியினர் பெயர்கள் அக்காலச் சாசனங்களில் கூறப்படும் வலங்கைச் சாதி களில் இல்லை. தவிர, கைத்தொழில் புரியும் சாதிகள் இப் பட்டியலில் வலங்கைச் சாதிகளாகக் கூறப்பட்டுள்ளன.

இத்தனை முரண்பாடுகள் இருப்பினும் இக்கதையின் அடிப்படைக் கரு ஒரு சமுதாய யதார்த்தமாகும். வேளாளர்களில் நிலக்கிழார்கள் நாட்டு அதிகாரிகளாக இருந்தனர் என்பதும் அவர்களுடைய ஆதிக்கத்தை வணிகர்களான செட்டியார்கள் எதிர்த்தார்கள் என்பதுமே அந்த உண்மை. இவர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கச் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளுவதற்காகத் தம்மோடு தொடர்புகொண்ட வர்களைச் சேர்த்துக்கொண்டு போராடினார்கள். அரசியல் ஆதிக்கம் நிலக்கிழார்களுக்கு இருந்ததால் இடங்கை வகுப்பினர் அவர்களை எதிர்த்துப் போராடினர். இவர்களது தலைவர் களாயிருந்த வணிகச் செட்டிகள், வியாபார உரிமைகள், வரிச் சலுகைகள், சுங்கவரி நீக்கம் முதலியவற்றிற்காகப் போராடினர். அவர்களோடு சேர்ந்து நின்ற கைத்தொழிலாளரும் வரிக் குறைப்புக்காகவும் சமூக அந்தஸ்தைக் காட்டும் சில உரிமைகளுக்காகவும் போராடினர்.

தங்கள் நலனைப் பாதுகாக்கவும் சமூக அமைப்பை மாறா மல் நிலைநிறுத்தவும் நிலக்கிழார்கள் தங்கள் அதிகாரப் பதிவிகளைப் பயன்படுத்தினர். சாசனங்களின் செய்திகள் இவற்றைத்