பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

ஆண்பெண் மாறி அனைதலும் அனைந்தபின்
கருப்பொறை உயிர்ப்பதும் காண்கி லீரோ!
எந்நிலத் தெந்தவித் திடப்படு கின்றதோ
அந்நிலத் தந்த வித்தங் குதித்திடுமால்
மாறி வேறாகும் வழக்குமு மிலையே.
பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திர ராயினோர் பூசுரர் அல்லரோ?
பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல்
மாந்தரில் பேதமாம் வடிவெவர் கண்டுளார்?
வாழ்நாள் உறுப்பு:மெய் வண்ணமோடு அறிவினில்
வேற்றுமை யாவது வெளிப்பட லின்றே.
தென்திசைப் புலையன் வடதிசைக் கேகில்
பழுதற வோதிப் பார்ப்பா னாவான்.
வடதிசைப் பார்ப்பான் தென்திசைக் கேகி
நடையது கோணிப் புலையன் ஆவான். அது நிற்க.
சேற்றிற் பிறந்த செந்தாமரை போல
பிரமற்கு கூத்திவயிற் றில்பிறந்த வசிட்டரும்
வசிட்டர்க்குச் சண்டாளி வயிற்றில் பிறந்த சத்தியரும்
சத்தியர்க்குப் புலைச்சி தோள்சேர்ந்து பிறந்த
பராசரரும் பராசரர்க்கு மீன்வா ணிச்சி
வயிற்றில் பிறந்த வியாசர்இந் நால்வரும்
வேதங்க ளோதி மேன்மைப் பட்டு
மாதவ ராகி வயங்கின ரன்றோ?
அருந்தவ முனியா னபக வற்கு
கருவூர் பெரும்பதி கட்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றில் அன்றவ தரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே
என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்.
பாம்வளர் திறம்சிறிதி யம்புவல் கேண்மின்.
ஊற்றுக் காடெனும் ஊர்தனில் தங்கிய
வண்ணார் அகத்தினில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்
சான்றோர் அகந்தன்னில் உறுவை வளர்ந்தனர்
நரம்புக் கருவியோர் நண்ணிடும் சேரியில்
பாணர் அகந்தன்னில் ஒளவை வளர்ந்தனள்
குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறையர் இடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்