பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

47

13 பள்ளர்களைப் பற்றிய சாதி வரலாற்று நாட்டுப் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆயினும், தி. நா. சுப்பிரமணியன் தொகுத்த ‘தென்னிந்தியக் கோயில் சாசனங்கள்’ மூன்றாவது தொகுப்பில் திருமலை நாயக்கன் காலத்தில் பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இடையே ஏற்பட்ட உரிமை வழக்குகளில், மன்னன் தீர்ப்பு வழங்கிய செய்திகள் காணப்படுகின்றன. அச்சாசனங்களில் காணப்படும் கதைகள் பள்ளர்களது மரபு வழிப்பட்ட வரலாற்றுக் கதைகளின் அடிப்படையில் எழுந்தனவாக இருத்தல் வேண்டும்.
14 Lokayatha, D. P. Chattopadiyaya.
15 மணிமேகலை, 13.
16 நீலகேசி, வேதவாதச் சருக்கம்.
17 கபிலரகவல். இப்பாடலில் சாதி சமத்துவம் பற்றிக் கூறும் பகுதி இக்கட்டுரையின் இறுதியில் பிற்குறிப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சாசனங்களின் மூலம் சில உரிமைகளுக் காகக் கீழ்நிலைச் சாதியினருக்குள் வழக்குகள் நடந்ததாக அறிகிறோம். அவ்வுரிமைகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் சில விவரங்களைச் சாசனங்கள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாகத் திருமணத்தின்போது எத்தனை பந்தற் கால்கள் நடுவது, மண ஊர் வலத்தில் எத்தனை குடைகள் பிடிப்பது, எத்தனை சங்குகள் ஊதுவது, எத்தனை வாத்தியங்கள் வாசிப்பது, எத்தனை தவல்கள். அடிப்பது, சாவுச் சடங்குகளில் எத்தனை சங்கு ஊதுவது, எத்தனை குடங்களில் நீர் கொண்டு வருவது, நடைபாவாடை விரிக்கலாமா, கூடாதா என்ற இவை போன்ற உரிமைகளுக்காக வழக்குகள் நடைபெற்றுள்ளன.
18 சித்தார் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு. இந்நூல் 1924 இல் வெளியிடப்பட்டது. இதன் முதற்பதிப்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது. இரண்டாம் பதிப்பை கன்னியா பிள்ளை என்பவர் சென்னை விஸ்வப் பிரம்ம சபையினரின் பிரதிக்கிணங்க வெளியிட்டார். இது இக்குறிப்பு நூலின் முகவுரையில் காணப்படுகிறது.
19 தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், தி. நா, சு. முகவுரை,
20 தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், தி. நா. சு. முகவுரை,
21 வருணசிந்தாமணி, ‘சூத்திரர் யார்?’ என்ற பகுதி.