பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

49

படுகின்றன. அந்நாளிலிருந்து கம்மாளரின் திருமண விழாக்களிலும் சாதி பற்றிய சடங்குகளிலும் இரட்டைச் சங்கும் கொட்டும் முழக்கலாமென்றும் அன்னோர் செருப்புகள் அணியலாம் என்றும் அவரது வீட்டுச் சுவர்களில் வெண்சாந்து பூசலாம் என்றும் சில உரிமைகளைக் கொடுத்ததாக அது குறிப்பிடுகிறது.
28 கே. கே. பிள்ளை, தென்னிந்திய வரலாறு.

தம் குலமே உயர்ந்ததெனக் காட்டுவதற்காகப் பழங்காலத்தில் தாம் உயர்குலத்தவர்களோடு தொடர்புடையவரெனக் கதைகள் புனையத் தொடங்கினர். இடங்கைச் சாதியினர் தமது அக்கினி குண்டப் பிறப்பைப் பற்றிக் கதை கட்டினர். இதைப் பற்றிய செய்தி மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி உயர்ந்ததெனக் காட்டுவதற்குப் பல புதிய கற்பனைக் கதைகளை உருவாக்கினர். அவற்றில் தாங்கள் பிராமணர்களுக்குச் சமமானவர் என்று நிலைநாட்ட முயன்றனர். இதை எதிர்த்துப் பிராமணர்களும் தங்களுக்குப் பிற வகுப்பினர் கீழ்ப்பட்டவர்களே எனக் காட்டும் கதைகளை எழுதினர். அக்கினிக் குண்டக் கதை இடங்கைச் சாதியினரால் எழுதப்பட்டிருக்க முடியாது. இக்கதை அவர்கள் நிலையை உயர்த்துவதற்குப் பதிலாகப் பிராமணர்களின் செருப்பைத் தாங்கி வந்த நிலைக்குத் தாழ்த்துகிறது. இக்கதை பிராமணர் உயர்வை நிலைநாட்ட பிராமணர்களால் எழுதப்பட்ட தாகவே இருக்கவேண்டும்.

நூலடைவு

இலக்கிய நூல்கள்

புறநானூறு
சிலப்பதிகாரம்
மணிமேகலை

நீலகேசி.

கல்வெட்டுச் சான்றுகள்

தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் (3 பாகங்கள்), தி. நா. சுப்பிரமணியன்.