பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

53

கொள்ள அவசியமாயிருந்தது. உள்நாட்டில் அஸ்திவாரமில் லாமல் மக்களைச் சுரண்டுவதும் வெளிநாட்டுப் போர்களை நடத்துவதும் சாத்தியமல்ல. ஆகவே, ஒவ்வொரு காலத்தில் சிற்சில சலுகைகளைக் கொடுப்பதின் மூலம் ஒவ்வொரு பிரி வினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டார்கள்.

முதன்முதலில் நிலவுடைமைக்குப் பங்கம் வராமலிருக்கப் பெரும் பகுதி நிலங்களைக் கோயில்களுக்கு எழுதிவைத்து, அதன் மேற்பார்வையை நிலவுடைமையாளர்களுக்கு விட்ட னர். ஊரிலுள்ள நிலவுடைமையாளர்களில் எந்தச் சாதி யினர் அதிகமோ, அவர்களே ஊர்ச்சபையாகவும் மகா சபையாகவும் இருந்து, கோவில் நிலங்களை மேற்பார்வை செய்து வந்தனர். அரசர்களின் சமூகத் தளங்களில் இவ் வமைப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், நிலவுடைமை யாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நிலத்தில் பாடு படுபவர்களது ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டன. நிலத்தில் பாடுபடாத வண் ணான், அம்பட்டன், மேளக்காரன் முதலியவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், நில உடமைச் சுரண்டல் கொடுமையாக இருந்தது என்பதை அக்காலத்தில் நடந்த அறப்போர்கள் காட்டுகின்றன.

இவ்வாறு நிலவுடைமையாளர்களுக்கும் பயிர் செய்பவர் களுக்கும் அளிக்கப்பட்ட சலுகைகள் மூலம் அரசாங்கம் இழந்த வருமானத்தை, வணிகர்களுக்கும் அவர்களைச் சார்ந் திருக்கும் தொழிலாளர்களுக்கும் புதிய வரிகளை விதித்துச் சரிக்கட்டிக் கொண்டனர்.

எடுத்துக்காட்டாகத் தமிழ் நாட்டில் இருந்து பெருவாரி யான ஏற்றுமதியாக முத்து, தந்தம், பவளம், பாக்கு, சந்தனக் கட்டை, ஏலம், பளிங்குக் கல், துணி, பட்டு முதலிய வணிகப் பொருள்களுக்கு ராசராசன் காலத்திலிருந்து, சுங்கம் வசூலிக்கப்பட்டது. அக்காலத்தில் வணிகக் குழுக்களாக இருந்த வளஞ்சியம், மணிக்கிராமம், நானாதேசி, நகரத்தார் முதலியவற்றிலிருந்து சுங்கம் வசூலிக்கப்பட்டது. வணிகர் களுக்கும் கைத்தொழிலாளர்களுக்கும் விதிக்கப்பட்ட பல வரிகளைப் பற்றிப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. எகவை, உகவை, ஒட்டச்சு, பாய், தறி, இறை, தட்டாரப் பாட்டம் முதலியவை இத்தகைய வரிகள்,

வணிகம் வளர்ந்தோங்கிய காலத்தில் வணிகக் குழுக்கள் செல்வாக்குப் பெற்றன. வணிகத்தை மேலும் பெருக்குவதற்கு இவ்வரிகளை நீக்கவேண்டியது அவசியம் என்று அவை உணர்ந் தன. வரிகளை நீக்குவதற்காகக் கிளர்ச்சி செய்வதற்கு இக்