பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும்

குழுக்கள் தங்கனோடு தொடர்புடைய, வணிகப் பொருள் உற்பத்தியாளர்களான கம்மாளர்களையும் அவர்கள் போன்ற கைத் தொழிலாளிகளையும் தங்களோடு இணைத்துக்கொண் டார்கள், இவ்வாறு நிலவுடைமை வகுப்பினரும் அவர்கள் தங்க ளோடு இனைத்துக் கொண்ட சாதியினரும் வலங்கைப் பிரி வினர் ஆனார்கள், வணிகக் குழுவினரும் அவர்கள் தங்களோடு சேர்த்துக் கொண்ட சாதியினரும் இடங்கைப் பிரிவினர் ஆனார் கள். வலங்கைப் பிரிவினர் கை வலுத்திருக்கும்போது, மன்னன் அவர்களோடு சேர்ந்துகொண்டு இடங்கைப் பிரிவினரை அடக்கு வான். இடங்கைப் பிரிவினர் கைவலுத்திருக்கும்போது, மன்னன் அவர்களுக்குச் சில சலுகைகளை அளிப்பான். எடுத்துக்காட்டாக, முதற் குலோத்துங்க சோழன் காலத் தில் வணிகக் குழுக்கள் இலங்கை, சுமத்ரா, ஜாவா, பர்மா முதலிய நாடுகளோடு வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டிச் செல்வாக்கும் பெற்று வந்தன. பல போர்களால் மன்னனது கருவூலம் காலியாக இருந்தது. அரசன் வணிகர் மீது வரி விதித்து அவர்களது எதிர்ப்பைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. ஓர் உபாயத்தைக் கையாண்டு அவர்களின் வருமானத்தைப் பெருக்கித் தனக்கும் பண வருவாய் வர வழி செய்தான். அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சுங்க வரியை அவன் நீக்கிவிட்டான். வணிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்களுக்கு லாபம் உயர்ந்தது. அதில் ஒரு பகுதியை அவர்கள் அரசனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனர். அரசன் அவர்களது ஆதரவை இவ்வாறு பெற்றான். இச்செய்தி குலோத்துங்கனது கல் வெட்டுகளிலும் ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன் உலாவிலும் காணப்படுகிறது.

சுங்கம் தவிர்த்து இருள் நீக்கி உலகாண்டவன்

என்பது மாநாடு கல்வெட்டு.

புவிராச ராசமனு முதலோன் நாளில்

தவிராத சுங்கம் தவிர்த்தோன்

என்று குலோத்துங்க சோழன் உலா கூறுகிறது. தொழில்கள் காரணமாக இடங்கையர், வலங்கையர் நலன்களில் வேறுபாடு இருந்தது. வலங்கையினரில் பயிரிடு வோரும் இடங்கையினரில் தொழிலாளர்களும் மன்னனது சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்களே. இவ்விரு பகுதியினருக் கும் அரசின்மீது வெறுப்புத் தோன்றுவதுண்டு. அவர்கள்