பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

55

ஒன்று சேர்ந்து மன்னனை எதிர்ததுவடாவண்ணம் அரசர்கள் அவர்களிடையே பழமையான சுதந்திரங்கள் பற்றிய தகராறு களை மூட்டிவிட்டுப் பெருங்கலகங்களுக்குத் தூண்டிவிட்டனர். இத்தகைய கலகங்கள் வலங்கை, இடங்கைக் கலகங்களென்றும் இவை மூட நம்பிக்கைகளால் வளர்ந்தனவென்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அது உண்மையல்ல. ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று இடங்கை, வலங்கைக் கலகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதைக் குறிப்பிட்டுக் கோயிற் சாசனங்களின் முகவுரையாசிரியர் கீழ்வருமாறு கூறியுள்ளார்:

கல்வெட்டும், அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய தொண்ணுாற்றாறு வகைச் சாதியினருக்கும் இழைத்த அநீதிகளைக் கூறுகிறது. இதேபோல இடங்கை வகுப்பார், அக்காலத்தில் ஏற்கவேண்டி வந்த வரிச் சுமைகளையும், தெரிவிக்கும் கல்வெட்டுக்கள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைக்கின்றன.

ஆகவே, இக்கலகங்களுக்குக் காரணம் சிறு சாதிப்பூசல்கள் அல்ல; நிலவுடைமையாளர்கள் தங்கள் நலன்களைப் பாது காத்துக் கொள்வதற்காக இடங்கையினருக்கு இழைத்த அநீதி களே இக்கலகங்களுக்குக் காரணம். இடங்கையினர் வலுவற்று இருக்கும்போது அரசனும் இவ்வநீதிகளை ஆதரித்து வந்தான். அவர்கள் ஒன்றுசேர்ந்து வலுப்பெறும்பொழுது அரசன் அவர் களுக்குச் சில சலுகைகளை அளிப்பான்.

இடங்கைப் பிரிவுகளிடையே உட்பூசல்களை ஏற்படுத்த அரசனும் நிலவுடைமையாளர்களும் முயன்று வந்தனர். இம் முயற்சிகள் வெற்றியடையும்போது இடங்கை வகுப்பினர் கொடுமையாக அடக்கப்பட்டனர். அவர்கள் கொடுக்க வேண்டிய வரிகளும் கூடின. அனுபவத்தின் மூலம் ஒற்றுமை யின் அவசியத்தை உணர்ந்த இடங்கை வகுப்பினர் ஒன்றுகூடி ஒற்றுமையாக இருப்பதற்கு முடிவு செய்ததுண்டு. வாலிகண்ட புரம் கல்வெட்டு இம்முடிவுக்குச் சான்று கூறுகிறது.

ஸ்வஸ்தியூரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராஜராஜ தேவனுக்கு யாண்டு பதினாறாவது வடகரை நாட்டு வாலிகண்ட புறத்துறையான், திருவாலீசுவரமுடைய

தி. நா. சுப்பிரமணியன், தென்னிந்தியக் கோயில் சாசனங் கள். -பொது பதிப்பாசிரியர்