பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை

1. கடப்பை ஜில்லா

கடப்பை ஜில்லாவில் காணப்படும் பழைய கல் வெட்டுகள் எல்லாம் தமிழ்க் கல்வெட்டுகளாகவே உள் ளன. ஊர்ப்பெயர்கள் - கடவுளர் பெயர்கள் அனைத்தும் இன்றும் அடியோடு மாறிக் காண்கின்றன. இங்கு மாதி ரிக்காகச் சிலவற்றைக் காண்க :

1. நந்தலுரு-அதிராச மண்டலத்து மேல் பாக்கை காட்டு நிரந்தனூர், சிவன் பெயர் - சொக்கப் பெருமாள் -614 of 1908.

2. குண்ட்லுரு - பொத்தப்பி நாட்டுக் குண்டலூர்#20 of 1908, -

8. ஒபலி - தெலுங்கில் ஒபிலி என்பது பழைய பெயர். ஒப்பிலி என்பது தமிழ்ப் பெயராக இருந்தது போலும்; 488 of 1912. சிவன் பெயர் - மலைக்கின்ற பெருமாள்.

4. அத்திராலா - அ தி ரா ச மண்டலத்துமேல் பாக்கை நாட்டுத் திரு அறத்துறை ; சிவன் - திருவிராமே சுவாம் உடையார். இதில் உள்ள 9 கல்வெட்டுகளில் தமிழ் 7 ; தெலுங்கு 2-ம் காலத்தாற் பிற்பட்டவை. அவற்றில் ‘அறத்துறை என்ற தமிழ்ப் பெயர் முறையே “அறது ாேவுல’ என்றும், பின்னர் அாது ாேவுலு என்றும் வழங்கப்பட்டன. பின்னது சிதைந்து இன்று அத்தி ாலா எனப்படுகிறது. தமிழ்ப்பெய்ர் மாறி வழங்கும் விந்தையைக் காண்க. 898 - 406 of 1912,

5. போலி - அதிராச........மேல்பாக்கை நாட்டுப் புடோல’ ; சிவன் பெயர் - உள்ளம் குழைந்த நாயனர் ; மெருமாள் பெயர் - கருமாணிக்கப் பெருமாள், இப்பெயர்

15-ஆம் நாற்றுண்டுத் தெலுங்கக் கல்வெட்டில் கரிய

மாணிக்கராய’ என்று காணப்படுகிறது. 407 - 410 of 1912.