பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 - பிரிவினைகளில் கோட்டம் என்ற சொல்லே இல்லை;

பின்வந்த பல்லவரும் அவற்றைப் புதியனவாக உண்டாக் கியதற்குச் சான்றில்லை. ஆதலால், சோழர் ஆட்சி தொண்டைமண்டலத்தில் ஏற்படுவதற்கு முன் ன ோ அந்தப் பிரிவினைகள் இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது தவருகாது. அந்தப் பிரிவினைகள் யாவை ? இருபத்து நான்கு கோட்டங்கள் -

1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம், 4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9. களத்தார்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11 ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 18. பல்குன்றக் கோட்டம், 14. இளங்காட்டுக் கோட்டம், 15. காலியூர்க் கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. பழுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19. செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவர்த்தனக் கோட்டம், 21. வேங்கடக் கோட்டம், 22. சேத்துார்க் கோட்டம், 28. வேலூர்க் கோட்டம், 24 புலியூர்க் கோட்டம். - - - - . .

தொண்டைநாடு சங்ககாலத்தில் அருவா நாடு ‘ என்றே வழங்கப்பட்டது. அஃது அருவா வடதலே’ என்றும் அருவா நாடு’ என்றும் இரண்டாகப் பேசப் பட்டது. அருவா நாட்டு மக்கள் அருவாளர் எனப் பட்டனர். பாந்துபட்ட சங்ககாலத்தின் ஒரு காலப் பகுதியில் திரையர்’ என்பவர் அங்காட்டை ஆண்டனர் என்பது பழம் பாடல்களால் தெரிகிறது.

9. ‘தொல் அருவாளர் தொழில் கேட்ப-பட்டினப்பாலே, அடி.275