பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

வேங்கட நாட்டுப் பெருமக்கள்

சங்கப் பாக்களில் வேங்கடநாட்டு வள்ளல்கள் சிலர் குறிக்கப்பட்டுள்ளனர்.

(1) கன்னுகனுர் என்ற புலவர் கரும்பனூர் கிழான் என் பவனைப் பாடியுள்ளார் :

    • #: 冰 米 米

ஒலிவெள் ளருவி வேங்கட நாடன் உறுவரும் சிறுவரும் ஊழ்மா றுய்க்கு மறத்துறை யம்பின் மான மறப்பின் றிருங்கோ வீராப் பூட்கைக் கரும்ப னுரன் காதல் மகனே ! ‘ “

(2) கள்ளில் ஆத்திரையனர் என்ற புலவர் ஆதனுங் கன் என்பவனைப் பாராட்டிப் பாடியுள்ளார் :

புன்றல்ே மடப்பிடி யினேயக் கன்றுதந்து குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும் கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன் செல்வுழி எழாஅ கல்லேர் முதியன் ஆத னுங்கன்'. ‘ இதுகாறும் கூறப்பெற்ற குறிப்புகளை நோக்க, 1. வேங்கடம் தமிழகத்தைச் சேர்ந்தது ; 2. வேங்கடம் திரையர் எனப்பட்ட தொண்டையர் ஆட்சிக்கு உட் பட்டது , 3. வேங்கட மலைத் தொடர்க்கு அப்பாற்பட்ட பகுதியே வடுகர் நாடு ; 4. வேங்கட நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் புலவர்களும் வள்ளல்களும் சங்க காலத்தில் இருந்தார்கள் , 5. வேங்கடத்தைப் பற்றிய பல விவாங் களைத் தமிழர் நன்கறிந்திருந்தனர்-என்பன உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகத் தெரிதல் காண்க.

20. புறம்-871, 2, புறம்-989,