பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 Ꭵ

இளங்கோவும் வேங்கடமும்

மாமூலனர், விழவுடை விழுச்சீர் வேங்கடம்’ என்று கூறியதும், கி. (:Բ, அல்லது கி. பி. முதல் நாற் ருண்டினன் என்று கருதத்தக்க தொண்டைமான் என்ற அரசன் திருப்பதி மலைமீது பெருமாள் கோவிலைக் கட்டி குன் என்று வேங்கட வரலாறு கூறியதும் காண-வேங் கடம் சங்க காலத்திலேயே விஷ்ணு ஸ்தலமாகக் கருதப் பட்டது , அங்கு விழாக்கள் நடைபெற்றன என்பன அறியக் கிடக்கின்றன. அந்த விஷ்ணு ஸ்தலம் வரவாத் தமிழகத்திற் சிறப்புற்றது ; தமிழகத்தின் வட எல்லை யைக் குறிக்கும் வேங்கட மலைமீது பெருமாள் திருக் கோவில் கொண்டு எழுந்தருளியிருப்பதைத் தமிழ் மக் கள் தரிசிக்க விரும்புதல் இயல்பன்றாே அந்த அவா, சங்க காலத்தில் ஒரளவு இருந்திருத்தல் வேண்டும் ; சங்க காலத்து இறுதியில் அல்லது அதனை அடுத்துச் செய்யப் பட்டதாகக் கூறப்படும் சிலப்பதிகாரத்தில் வேங்கடம் சிறந்த விஷ்ணு ஸ்தலமாகப் பேசப்பட்டிருத்தலைக் காண்கிருேம். அப்பெருமானைத் தரிசிக்க மலேயாளத்தில் உள்ள மாங்காடு என்னும் ஊரினனன பிராமணன் ஒரு வன் சேர நாடு விட்டு யாத்திரையாகச் சென்றான் என் பது கவ்னிக்கத் தக்கது. இங்ஙனம் சென்று மீண்ட அவன் திருவேங்கட மலைமீது தான் கண்ட பெருமானது கின்ற கோலத்தை,

“ வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்

ஒங்குயர் மலேயத்(து) உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து