பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24

முடிவுரை

இது காறும் கூறப்பெற்ற பழம்புலவர் பாடற்செய்தி களால் கீழ்வருவனவற்றை அறியலாம் :- -

1. வேங்கட மலைத்தொடர் தமிழகத்தைச் சேர்க் திது.

2. வேங்கட மலைத்தொடர்க்கு அப்பாற்பட்டது வடுகர் நாடு.

8. வேங்கட நாடு திரையர் எனப்பட்ட தொண்டை பான்களுக்கு உட்பட்டது.

4. வேங்கட நாட்டில் வாழ்ந்த புல்லி என்பவன் வேடர் தலைவன் ; மழ நாட்டை வென்றவன்.

5. வேங்கட நாட்டு யானேகள் தமிழகத்தில் பெயர் பெற்றவை.

6. வேங்கட மலை காட்டைப் பழம்புலவர் நன்கு அறிந்திருந்தனர். -

7. மாமூலனுர், கல்லாடனர் முதலிய புலவர் சில ாேனும் வேங்கட நாட்டவராக நம்ப இடமுண்டு.

8. வேங்கட நாட்டில் புல்லி, ஆதனுங்கன், கரும்ப ஜார் கிழான் போன்ற வள்ளல்கள் - தமிழ்ப் புலவர்களை ஆதரித்த கொடையாளிகள் - இருந்தனர்.

the part of the Satavahanas”.--Dr. S. K. Aiyangar's Int. to the Pallavas of Kanchi, p. 14.

“The Satavahana Empire extended from sea to sea and virtually comprised the whole of South India excluding the Chola, Pandya and Chera Kingdoms in the extremity.”—K. M. Panikkar, A Survey of Indian History, p. 81. -