பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக வுரை

தமிழ் நாட்டு வட எல்லே எனப் பெயர்கொண்டு வெளி வரும் இந்நூல் இலக்கியம் - வரலாறு - கல்வெட்டுகள் என்பவற்றைத் துணையாகக் கொண்டு ஆராய்ந்து எழு தப் பெற்றதாகும். சங்ககாலப்புலவர் முதல் கி.பி. 17-ஆம் நாற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவர் ஈருக எல்லாத் தமிழ்ப் புலவரும் 17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வட மொழிப் புலவரும் வேங்சடமே தமிழக வட எல்லை என் பதை வற்புறுத்திச் சென்றனர். வரலாறும் கல்வெட்டு சளும் வடபெண்ணை யாமம் தமிழகத்தின் வட எல்லை என்பதை வலியுறுத்துகின்றன. சித்துர்-தென் நெல்லூர் ஜில்லாக்கள் தொண்டை நாட்டின் பகுதிகளே என்பதை அவ்விரு ஜில்லாக்களிலும் உள்ள கல்வெட்டுகள் மெய்ப் பிக்கின்றன.

இந்த உண்மைகளைத் தமிழரும் தெ லுங்க ரு ம் உணர்த்து - மண்ணுசை மறந்து - நேர்மையான முறையில் அமைதியும் அறமும் துணை செய்யத் தமிழ் நாட்டின் இரு கண்களாகிய திருவேங்கடம் - திருக்காளத்தி ஆகிய இரண் டையும் தன் அகத்தே பெறும் தமிழ் மாகாணத்தைப் பி ரி க் க நன்முறையில் முயலவேண்டும் என்பதைக் குறிப்பதே இவ்வாராய்ச்சி தாலின் நோக்கமாகும்.

சேக்கிழார் அகம், !

சென்னே,

மா. இராசமாணிக்கம்