பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37

பொருங்துபெருந் தவர்கடட்டம் போற்ற வந்து

பொன்முகலிக் கரை அணேந்து தொழுது போகி அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல

ஆளுடைய பிள்ளையார் அயன்மால் தேடும் மருந்துவெளி யே இருந்த திருக்கா ளத்தி

மலையடிவா ரம்சார வந்து தாழ்ந்தார். “ தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே

தடஞ்சிலா தலசோபா னத்தால் ஏறி வாழ்க்கிமையோர் குழாம்கெருங்கு மணிமீள் வாயில்

மருங்கிறைஞ்சி உள்புகுந்து வளர்பொற் கோவில் சூழ்ந்துவலம் கொண்டிறைவர் கிருமுன் பெய்தித்

தொழுதுதலே மேற்கொண்ட செங்கை போற்றி வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்

மெய்வேடர் பெருமாவனக் கண்டு? வீழ்ந்தார்.’ இங்ஙனம் வீழ்ந்த சம்பந்தர்,

“ சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்பரம்

உந்துமா முகலி'யின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையார் இணேயடி என்மனத் துள்ளவே.” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தார்.

பிறகு அவர் திருக்காளத்தி மலைமீது கின்றபடியே பூநீ சைலம் முதலிய வடநாட்டுத் தலங்களைப் பற்றிப் பதிகம் பாடினர். என்னே காளத்திக்கு வடக்கிலும் மேற்கிலும் உள்ள கிலப்பகுதியில் அருந்தமிழின் வழக்கு இல்லை ஆதலின் என்க’ என்பது சேக்கிழார் வாக்கு. சுந்தரர்

சுந்தார் காஞ்சி, திருவல்லம் முதலிய இடங்களைத் தரிசித்துத் திருக்காளத்தியை அடைந்தார்.

20. கண்ணப்ப காயர்ை. 21. சம்பந்தர் புராணம், செ. 102i1022, 22. பொன் முகலி யாறு; சுவர்ணமுகி.வடமொழிப்பெயர்,