பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38

  • தடுக்க லாகாப் பெருங்காதல் தலேகின் றருளும் கண்ணப்பர் இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்இறைவர் மகிழ்ந்த காளத்தி அடுக்கல் சேர அணைந்துபணிக் தருளால் ஏறி அன்பாறு மடுப்பத் திருமுன் சென்றெய்தி மவலமேல் மருங்தை வணங்கினர்.”*

காளத்திமலைமீதுள்ள சிவபிரான் பெயர்-காளத்தியீசன்

அம்மன் பெயர்-ஞானப்பூங்கோதை.”

இப்பெயர் வழக்குக் கி. பி. 7-ஆம் நூற்றாண்டினதாகும்.

முடிவுரிை -

தியவராகத் தமிழகம் புகுந்த பல்லவர் காலத்தி லும் (கி. பி. 800 - 900) தொண்டை நாடு தன் தமிழ் வளத்தை இழக்கவில்லை, ஆழ்வார்கள் திருப்பதி மலே யில் பெருமானத் தரிசித்துத் தமிழிற்றான் பாடினர்கள் ; அதனை அடுத்துள்ள காளத்தி மலையிற் சிவபிரானே நாயன் மார் தரிசித்துத் தமிழிற்றான் பாடினர்கள். இருதிறத் தாரும் அவற்றுக்கு வடபால் செல்லவில்லை. அவற்றுக்கு. அப்பால் மொழி வேறு பட்டதே காரணம்.

‘ வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎயம்.’ என்று சங்ககாலப் புலவர் பாடியதும்,

‘காளத்திக்கு வடக்கிலும் மேற்கிலும் அருங் தமிழின் வழக்கில்லை ; அதல்ை சம்பந்தர் காளத்தியிலிருந்தே வட. காட்டுத் தலங்களைப் பாடித் திரும்பி விட்டார்” என்று சேக்கிழார் பாடியதும் வேங்கடத்திற்கும் காளத்திக்கும் வடக்கிலும் மேற்கிலும் அக்காலத்தில் தமிழ் வழங்கவில்லை. என்னும் உண்மையை உணர்த்துகின்றன அல்லவா?

ஆயின், காளத்திக்கு வட கிழக்கேயுள்ள நெல்லூர் ஜில்லாவின் தென்பகுதி பையூர்க்கோட்டம் ஆதலால் கூர்ேத் தாலுகாவில் தமிழ் வழக்கு இருந்தது என்பது. கல்வெட்டுகளால் தெரிகிறது. இந்த உ ண் ைம ைய. உணர்ந்துதான் போலும் சேக்கிழார் பெருமான், சம்பந் தர் காலத்தில் (கி. பி. 7-ஆம் நாற்றாண்டில்) காளத்திக்கு. வடக்கிலும் மேற்கிலும் தமிழ் வழங்கவில்லை” என்று. குறித்தார். * . 23. ஏயர்கோன் புரா. செ. 196. 24. அப்பர் திருப்பதிகம் செ. 9.