பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4I

முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120). வேங்கை காட்டை ஆண்ட இராஜராஜன் மருமகனை விமலாதித் தனுக்கும் குந்தவ்வைக்கும் பிறந்த சாளுக்கிய இராஜ ராஜன் வேங்கை நாட்டை ஆளத் தொடங்கினன். இவனே தெலுங்கப் புலவர் திலகரானவரும் தெலுங்கில் முதல் காவியமாகிய பாரதத்தை வரைந்தவருமான நன்னய பட்டரை ஆதரித்தவன். இவன் காலத்தில் சோழர் உறவு நெருங்கி இருந்ததால் வேங்கி நாட்டுத் தெலுங்கு, நெல் லுர்-சித்துனர் ஜில்லாக்களிற் சிறிது துழைய இடமிருந்தது. இங்ஙனமே தமிழர் திராகாராமம் வரை குடியேறி இருந் தனர். அவர்கள் அரசியல் அதிகாரிகள், வணிகர் முதலி யோராவர். சாளுக்கிய இராஜராஜன் இராஜேந்திர சோழனுடைய மகளை மணந்து முதற் குலோத்துங்கனைப் பெற்றான். இராஜேந்திர சோழன், அவன் மக்கள் மூவர் ஆட்சி செய்த பிறகு சோழ அரசுக்கு உரிய பிள்ளை இல்லாததால், சாளுக்கிய - சோழனை முதற் குலோத் துங்கனே சோழப் பெருநாட்டுக்கு அரசன் ஆன்ை. அவனுக்குப் பின் அவன் மரபினரே சோழப் பேரரசு அழியும் வரை அரசாண்டனர். இந்தச் சாளுக்கிய சோழர் தமிழில் வல்லவராக இருந்து வந்தனர்.

முதற் குலோத்துங்கன் தன் மகளிருள் ஒருத்தியை (இராஜ சுந்தரியை)க் கலிங்க அரசனுக்கும் மற்றாெருத் தியை (சூரிய வல்லியை) ஈழத்தரசனுக்கும் மன மூடித்தான்.” -:

முதற் குலோத்துங்கன் காலத்தில் தெலுங்கு நாட்டுச் சிற்றரசருள் சிறந்தவர் வேலனுண்டுச் சோழர் மரபினர் ஆவர். இவர்கள் தங்களைச் சோட(சோழ) மஹாராஜர்

8, R. A. N. Sastry-Cholas, Vol. 2, p. 53.