பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 (வேங்கடம், குமரி ஆகிய இரண்டிற்கும் இடைப் பட்ட கிலத்தது தமிழ்) என்று குறித்திருத்தல் காண்க. (2) மூன்மும் குலோத்துங்கன் காலத்தில் (கி. பி. 1178-1218) கன்னூல் செய்த பவணந்தி முனிவர் தமிழக எல்லைகளைக் குறித்துள்ளமை காண்க :

‘ குணகடல் குமரி குடகம் வேங்கடம் -

எனுநான் கெல்லையில் இருந்தமிழ்க் கடலுள். ‘ எனவே, பிற்காலச் சோழர் காலத்திலும் வேங் கடமே தமிழகத்தின் வட எல்லை என்பதைப் புலவர் நன்குணர்ந்திருந்தனர் என்பது தெளிவாதல் காண்க.

தமிழர் தொன்று தொட்டு இங்ானம் தம் நாட்டு எல்லையைக் குறித்தவாறு - சிறப்பாக வட எல்லையைக் கூறியவாறு, தெலுங்கர் தமது நாட்டுத் தென் எல்லை யையோ பிற பக்க எல்லைகளையோ விடாமற் குறித்தன

ராகத் தெரியவில்லை. இது கவனிக்கத் தக்கது. கெல்லூர் ஜில்லாவில் தமிழ்க் கல்வெட்டுகள்

நெல்லூர் ஜில்லாவின் பல பகுதிகளில் சோழர் காலத்துத் தமிழ்க் கல்வெட்டுகள் காணக்கிடக்கின்றன. அவற்றின் நடை முதலியவற்றிற்கும் தமிழ் நாட்டுக் கல் வெட்டு நடை முதலியவற்றுக்கும் வேறுபாடு இல்லை. எனவே, சோழப் பெருநாடு முழுவதிலும் ஒரேவகைத் தமிழ்நடை வழக்கில் இருந்தது என்பதை அறியலாம். சோழர் காலத்தில் நெல்லூர் ஜில்லாவில் தமிழ் இடப் பெயர்கள் வழக்கில் இருந்தன என்பதைக் கீழ்வரும் கல் வெட்டுகளால் அறியலாம் :- - - (1) ஸ்வஸ்தி பூரீ திரிபுவன சக்ரவர்த்திகள் பூரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு முப்பத்தைந்தா