பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6I

காலத்திலும் நாட்டின் பெயர்களும் பிறவும் நல்ல தமிழிற் ருன் காணப்படுகின்றன. பொங்களுர் - சிங்கய்ய நல்லூர் என்று ஹொய்சள அரசப் பிரதிநிதியின் பெயரால் மாற்றியமைக்கப்பட்டது. வல்லாள தேவர் வரி என் றொரு வரி திருவேங்கட நாட்டில் விதிக்கப்பட்டிருந்தது.” வண்சடகோபர் என்ற பெயரால் நந்தவனம் அமைந்திருந் தது. சேதிராயன்’ என்ற மலர்ப் பல்லக்குச் செய்யப் பட்டிருந்தது. பூரீ காயனர் யாதவராயர், எர்ரமஞ்சி பெரிய பம்ம நாயகன், சேரனை வென்றான் என்ற பெயர் கொண்ட அழகிய விடுதி, அனந்தாழ்வான் பிள்ளை, பூவை நகர் - காண்க. -

ஹொய்சளர் ஆட்சி முடிவெய்தியவுடன் தென்னுட் டில் தோன்றியது விஜயநகரப் பேரரசு ஆகும். அஃது ஏறக்குறையக் கி. பி. 1836-ல் ஏற்பட்டது. அது தென் இந்தியாவில் துங்கபத்திரை யாற்றுக்குத் தெற்கே இந்து அரசினை நிலை பெறச் செய்ய ஏற்பட்டது. அதனல் அதனே உண்டாக்கியவர் தமிழகம் முழுவதையும் கன்னட நாட் டையும் தெலுங்க நாட்டின் ஒரு பகுதியையும் கைப் பற்றினர்; அங்கங்கு இருந்த அரசர்களையே தமக்கு அடங்கி ஆண்டு வருமாறு செய்தனர். விஜய நகர ஆட்சி தென்னுட்டில் ஏறக்குறைய முந்நூறு வருடகாலம் நிலைத் திருந்தது. அந்தக் காலத்தில் தமிழகத்து வடஎல்லை எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பகுதியிற் காண் போம்.

5. Ibid. No. 102. 6, Ibid. No. 100. 7. Ibid. No. 103 & 104, 8, Ibid. No. 106. 9. Ibid. No. 113, 171, 173, 177.