பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


VI. விஜயநகர ஆட்சியில் வேங்கடம் (கி. பி. 1850-1680)

1. முதற் பரம்பரை

முதலாம் புக்கராயர் புத்திரான கம்பண வுடையார் என்பவர் தொண்டை நாட்டையும் சேர-சோழ-பாண்டிய நாடுகளையும் வென்மூர் ; முதற் குலோத்துங்களுல் மூடப் பட்டுச் கிடந்த காஞ்சி - கயிலாச நாதர் கோவிலைத் திறப் பித்துப் பூசை முதலியன நடைபெற ஏற்பாடு செய்தார். தமிழகத்தில் அமைதி நிலவத் தொடங்கியது. வேங்கடம் மிக்க சிறப்படையத் தொடங்கியது. விஜயநகர ஆட்சி முதற் பகுதியில் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழி லேயே வெளியிடப்பட்டன. அக்கல்வெட்டுகளில் காணப். படும் பழைய இடப்பெயர்கள், மக்கட்பெயர்கள், அரசியல் அலுவவாளர் பெயர்கள் முதலியன தமிழிற்முன் காணப் படுகின்றன. அவற்றுட் சில கீழே காண்க :

1. திருமல்லிகாதன்-சாம்புவாயப் பெருமாள் தானம் செய்தான்.” -

2. பெருமாளும் தேவியரும் விழாக் காலங்களில் எழுந்தருளும் மண்டபத்தின் பெயர் அழகப் பி ரா ன் என்பது.?

8. திருமலையில் உள்ள கோ விற் கணக்கன் எல்லாக் கல்வெட்டுச் செய்திகளையும் பொறிப்பவன். அவன் பெயர் திருகின்றவூர் உடையான் என்பது.” -

1. Tirumalai Ins, Vol. I, No. 182. 2. 184. 18. 184; திருகின்றவூர் இப்பொழுது கிண்ணனூர் * என்று வழங்குகிறது; சென்னைக்கும் ஆர்க்கோணத்திற்கும் இடையில் இருப்பது பூசலார் நாயனர் பேறு பெற்ற தலம்.